2026ல் முதல்வர் யார், சீமானா? விஜய்யா? கருத்து கணிப்பால் கடுப்பாகி சீமான் பட இயக்குனர் போட்ட பதிவு.

0
118
- Advertisement -

சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். இவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதனை அடுத்து விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார்.

இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாகுவதாகவும் அறிவித்து இருக்கிறார். விஜய்யின் புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் கட்சி குறித்து விமசரித்துள்ளார் இயக்குனர் களஞ்சியம்.

-விளம்பரம்-

இவர் 1996 ஆம் ஆண்டு முரளி மற்றும் தேவையணி நடிப்பில் வெளியான ‘பூமணி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து கிழக்கும் மேற்கும், மிட்டா மிராசு போன்ற படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து கருங்காலி என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். இதில் அஞ்சலி தான் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இறுதியாக முந்திரிக்காடு என்ற படத்தை இயக்கி இருந்தார் இதில் சீமான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

மேலும், இவர் சீமானின் தீவிர தொண்டர். இப்படி ஒரு நிலையில் 2026 ஆம் ஆண்டில் முதல்வர் யார் என்று விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவருக்குள் வைக்கப்பட்ட கருத்து கணிப்பை பார்த்து கடுப்பான இவர் ‘ஏன்டா முட்டாள்களா… நேத்து கட்சி ஆரம்பிச்சவனும், 14 -வருஷமா தொண்டை தண்ணி வத்த கத்துறவனும் ஒண்ணாடா? இன்னும் கொடி என்ன? கொள்கை என்ன? எதையும் சொல்லல…? அதுக்குள்ள அடுத்த முதல்வரா? என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

Advertisement