இவர்கள் கையை தட்டி விடுவாரா சிவகுமார்…!பிரபல இயக்குனர் காட்டம்..!

0
471
sivakumar

சமீபத்தில் நடிகர் சிவகுமார் தன்னிடம் செல் போனில் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல் போனை ஆவேசமாக தட்டி விடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ கண்ட அனைவரும் நடிகர் சிவகுமாரா இது என்று தங்களுது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், நடிகர் சிவகுமார் எதற்காக அந்த இளைஞரின் செல் போனை தட்டி விட்டேன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்திருந்தார்.

நடிகர் சிவகுமாரின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பெரும்பாலான ரசிகர்கள் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் சிவகுமாரை ட்ரோல் செய்து வரும் நிலையில் ‘மேற்கு தொடர்ச்சி மலை’இயக்குனர் லெனின் பாரதி சிவகுமார் செலஃபீ விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் லெனின் பாரதி:

lenin barathi

அவர் பதிவிட்டுள்ளது என்ன வேனின், செல்ஃபி எடுத்தவரின் கையைத் தட்டிவிட்ட நடிகர் சிவக்குமாரின் கை குறைந்தபட்சம் தன் மகன்கள் கட் அவுட்களுக்கு பால் அபிசேகம் பண்ணுகிற, வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுகிற மற்றும் தன் மகன்கள் நடித்த படங்களை லைக் செய்கிற கைகளைத் தட்டி விடுமா…?என்று கேள்வியை முன்வைத்துள்ளார்.