நடிகர் ஸ்ரீ பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
லோகேஷ் கனகராஜ்:
இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் நடிகர் உபேந்திரா, நாகர்ஜுனா, சௌபின் சாகிர், ஆமீர் கானும் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் பேட்டி:
அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகர் ஸ்ரீ நன்றாக இருக்கிறார். ஒரு நாள் காலையில் அவர் எனக்கு வீடியோ கால் செய்து, புத்தகம் ஒன்றை வெளியிட இருப்பதாக சொன்னார். நான் சரியாக திட்டமிட்டு செய்யலாம் என்று சொன்னேன். அதற்கு ஸ்ரீ, சீக்கிரம் பண்ணனும் என்று சொன்னார். சரி என்று நானும் சொல்லிவிட்டேன். இன்ஸ்டாவில் ஏதோ ரீல் போட்டதற்கு இவர்கள் எல்லாம் ஸ்ரீயை கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று என்னையும் சேர்த்து திட்டி இருந்தார்கள்.

ஸ்ரீ பற்றி சொன்னது:
இதற்காக எல்லாம் சமூக வலைத்தளத்தில் இருந்து நான் விலகியே இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து அனைத்து விஷயங்களுக்கும் என்னால் விளக்கம் அளித்து கொண்டிருக்க முடியாது. ஸ்ரீயை பற்றி பேச ஏன் தயங்குகிறேன் என்றால் அது இன்னொருவருடைய வாழ்க்கை. அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை ஏன் வெளியே சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஸ்ரீ திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஸ்ரீ. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் தான் நடிக்க வந்தார். இந்த தொடரின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் படி இவர் வழக்கு எண் 18 கீழ் 9 என்ற படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார். கடைசியாக இவர் இறுக்கப்பற்று படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் இவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த இவரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருந்தது.






