விஜய் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருந்தார்கள். அதிரடி ஆக்சன் பாணியில் வெளிவந்த லியோ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். இதை அடுத்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கூலி படம்:
இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா ஆகியோர் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாகிர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் பேசியது:
மேலும், இந்த படத்தில் நடிகர் ஆமீர் கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கிறது இந்நிலையில் இந்த படத்தினுடைய ப்ரோமோஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தான் படித்த பிஎஸ்ஜி கல்லூரிக்கு சென்று படத்திற்கான ப்ரோமோஷன் செய்திருந்தார்.

விஜய் பற்றி சொன்னது:
அது மட்டும் இல்லாமல் அந்த விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், விஜய் இல்லாமல் lcu முடிவு பெறாது.
ஆனால், அவர் அதற்குள் வருகிறாரா? இல்லையா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இப்போது அவர் எண்ணம் என்ன என்பது எல்லோருக்குமே தெரியும். அவருடைய முயற்சி எதை நோக்கி சென்று கொண்டிருப்பது என்று நமக்கும் தெரியும். ஆனால், அவர் இல்லாமல் lcu முடிவடையாது என்று கூறியிருக்கிறார்.

விஜய் திரைப்பயணம்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் மத்தியில் தந்திருக்கின்றது. தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரியாமணி தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.






