விசிக பிரமுகரிடம் ஓடி சென்று மர்மமான முறையில் இறந்த வேறு ஒருவரின் மனைவி – மோகன் ஜி போட்ட பதிவு.

0
653
MohanG
- Advertisement -

விசிக பிரமுகரிடம் ஓடி சென்ற பெண் மர்மமான முறையில் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகள் தான் பவித்ரா. இவருக்கு சில வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆகி ஐந்து வயதில் மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பவித்ரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய கணவர் வீட்டில் இருந்து தன்னுடைய ஐந்து வயது மகள் உடன் நகை, பணத்துடன் காணாமல் போய் இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் திடீரென்று சில தினங்களுக்கு முன் இவர் தைலாவரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார். இந்த தகவலை போலீசுக்கும், பவித்ராவின் பெற்றோருக்கும் அக்கம்பக்கத்தினர் கொடுத்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக பவித்ராவின் தந்தை கோவிந்தராஜ் கூறியிருப்பது, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் தான் காதல் என்ற பெயரில் என்னுடைய மகளின் மனதை கெடுத்தார். அவர்தான் என்னுடைய மகளையும் அழைத்து சென்றார். தொழில் செய்வதாக கூறி பவித்ராமிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகை, பணங்களை எல்லாம் வாங்கி இருக்கிறார்.

- Advertisement -

பவித்ரா தற்கொலை:

பின் 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கேட்டு என் மகள் பவித்ராவை தமிழ்வாணன் கொடுமை செய்திருக்கிறார். இது தொடர்பாக என்னுடைய மகளும் என்னிடம் கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இன்னும் ஒரு வாரத்தில் நான் தமிழ்வாணனை பிரிந்து உங்களுடன் வந்து விடுகிறேன் என்று என்னுடைய மகள் என் தலையில் அடித்து சத்தியம் செய்து இருந்தார். இது தொடர்பான வீடியோவையும் நான் போலீஸ் இடம் கொடுத்து இருக்கிறேன். அதற்குள் என் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கிறார். அவள் செய்த தற்கொலையாக இருக்காது.

விசிக பிரமுகர் கைது:

தமிழ்வாணன் தான் என் மகளை கொன்று இருக்கும் வேண்டும் என்று பவித்ராவின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் தமிழ்வாணனை கைது செய்து விசாரித்து இருக்கிறார்கள். மேலும், விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பவித்ரா திருமணத்திற்கு முன்பே தமிழ்வாணனை காதலித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருடைய நடவடிக்கை பிடிக்காமல் போனதால் தான் பவித்ரா விலகி தன்னுடைய தந்தை சொன்னபடி உறவினர் பையனை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு ஐந்து வயதில் மகள் இருக்கிறார். பின் சோசியல் மீடியா மூலம் தான் பவித்ராவிற்கு மீண்டும் தமிழ்வாணனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

வீட்டிற்கு தெரியாமல் பவித்ராவை தமிழ்வாணன் வெளியில் அழைத்து சென்றிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் மத்தியில் நெருக்கம் அதிகமாகின்றது. இதை அறிந்த பவித்ராவின் கணவர் சண்டை போட்டு இருக்கிறார். இதனால் பவித்ரா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், நீதிபதி 5 வயது மகளின் நலனை கருதி பவித்ராவை கணவர் வீட்டிலேயே இருக்க சொல்லுகிறார்கள். இதனை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் அனைவரும் கோயில் திருவிழாவுக்கு சென்ற நிலையில் தன்னுடைய மகளுடன் வீட்டில் இருந்த பணம்,நகை எல்லாம் எடுத்து கொண்டு பவித்ராவை தமிழ்வாணன் அழைத்து சென்றிருக்கிறார். பவித்ராவை முதலில் பொத்தேரியில் ஒரு தனி வீடு எடுத்து தங்க வைத்தார்.

மோகன் ஜி பதிவு:

அதன் பின்னர் ஒரு வாரத்திற்கு முன்பு தான் தைலாவரத்திற்கு வீடு மாற்றி இருக்கிறார்கள். உடனே பவித்ரா தூக்கிட்டு நிலையில் இறந்து கிடக்கிறார் என்று போலீசார் கூறியிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் பவித்ரா தன்னுடைய தற்கொலைக்கு காரணம் தமிழ்வாணன் தான் என்று குறிப்பிட்டு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை என்பது விசாரணையில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதனால் நிபந்தனையுடன் தமிழ்வாணனை போலீசார் விடுவித்து இருக்கின்றார்கள். இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மோகன் அவர்கள்டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், திரௌபதி 2 காலத்தின் தேவை. சரியான நேரத்தில் வரும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement