தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இவர் இயக்கிய பகாசுரன் படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் பகாசூரன் படக்குழு சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
பகாசூரன் வாத்தி ஒரே நாளில் :
அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் ஜி பகாசூரன் படத்தில் பெண்களுக்கு செல்போன்களினால் ஏற்ப்படும் ஆபத்துகள் குறித்து இந்த படத்தில் கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய மோகன் ஜி “நடிகர்களை வைத்து படங்கள் எடுப்பதை விட இயக்குனர்களை வைத்து படம் இயக்குவது மிகவும் எளிதாக இருக்கிறது. பகாசூரன் படம் வாத்தி பத்துடன் ஒன்றாக வெளியாகிறது. ஒரு படத்தை பட்ஜெட் மட்டுமே வைத்து எடை போடுவது தவறான விஷயம். அதில் குறப்பிடம் கருத்தை மட்டுமே ஒப்பிட்டு பார்க்க வேண்டும்
அடித்த படமும் உண்மை சம்பவம் தான் :
அந்த வகையில் இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து பாகாசுரனும், பள்ளிகளில் தரம் உயர்த்த பட வேண்டும் என்ற கருத்தை வாத்தி படமும் கூறுகிறது. சினிமாவில் ஒரு படத்தை திரையிடுவது சாதாரண காரியம் கிடையாது. செல்வராகவும் நடித்த படம் ஓடிடியில் வெளியானது. எனவே செல்வராகவும் நடித்து வெளியாகும் படம் இந்த படம் தான். மேலும் பேசிய அவர் தொடர்ந்து உண்மை சம்பவங்கள் குறித்து படம் இயக்க போவதாக கூறினார்.
ஏன் சர்ச்சையான விஷியங்கள் :
சோசியம் மீடியாக்களில் தன்னை குறித்து விமர்சனங்கள் வரும்போதெல்லாம் நான் அமைதியாக இருந்தால் அது உண்மை என்றாகிவிடும் என்ற காரணத்திற்காக நான் அந்த கருத்துகளுக்கு பதில் கூறி வருகிறேன். திரைப்படங்களில் சர்ச்சையான விஷியாயங்கள் மற்றும் காட்சிகளை வைப்பது மக்களை கவருவதற்காக அல்ல மக்களுக்கு புரிதல் ஏற்படுத்துவதற்காக. சமுதாயத்தில் என்னை சுற்றி இருக்கும் விஷியங்களை படமாக்குவது எனக்கு பிடித்திருக்கிறது.
என்னை வைத்து பாஜக வளரவில்லை :
திரெளபதி படத்திற்கு பிறகு பதிவாளர் அலுவலகத்திற்குள் மூன்றாம் நபர் வரக்கூடாது என்றும் cctv வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது என்னுடைய படத்தினால் என்று சொல்லவில்லை. ஆனால் திரைப்படம் வெளியான பிறகு ஏற்பட்டுள்ள மற்றம் எனக்கு மகிச்சி அளிக்கிறது. மேலும் பேசிய அவர் தன்னை வைத்து பாஜக, பாமக வளரவில்லை என்றும் அவர்கள் ஏற்கனவே பெரிய காட்சிகளாக வளர்ந்து விட்டன எனவே என்னை வைத்தும் வளரும் அவசியம் அவர்களுக்கு கிடையாது என கூறினார்.