இயக்குனர் ஆவதற்கு முன்பாக முருகதாஸ் மணிவண்ணனுடன் நடித்துள்ளார்…!இப்போது போலவே இருக்கிறார் பாருங்க..!

0
1219
Murugadoss
- Advertisement -

தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள் அனைவருமே துணை இயக்குனர்களாக பணியாற்றியவர்களாக தான் இருப்பார்கள். அதில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மட்டும் விதிவிலக்கு இல்லை.

-விளம்பரம்-

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அஜித் நடித்த தீனா படம் துவங்கி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் வரை இவர் இயக்கிய அணைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைந்த்து.

- Advertisement -

தற்போது வெற்றி இயக்குனராக இருந்த ஏ ஆர் முருகதாஸ் முதலில் ஒரு வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவுக்கு வந்தார். பின்னர் ரட்சகன், குஷி போன்ற படங்களில் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். மேலும் முருகதாஸ் சில படங்களிலும் தலை காண்பித்துள்ளார்.

நடிகர் அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பூச்சூடவா’ என்று படத்தில் நடிகர் மணிவண்ணனுடன் ஒரு சிறு காமெடி காட்சியில் நடித்திருப்பார் முருகதாஸ். அந்த படத்தில் சரியாக 25.12 நிமிடத்தில் அந்த படத்தில் தோன்றியிருப்பர் முருகதாஸ்.

-விளம்பரம்-
Advertisement