கன்னட திரையுலகில் பவர்ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. மேலும், நேற்று புனீத் அவர்கள் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த பொழுது மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு இருந்தார்.

தீவிர சிகிக்சை அளித்து வந்த நிலையில் புனீத் அவர்கள் திடீரென்று உயிர் இழந்தார். இவருடைய இறப்பு செய்தி கன்னட திரை உலகில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவரின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெங்களூரில் உள்ள மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் கூடியதால் கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : தாமரையின் காயின் திருட்டு விவகாரம் – கூட்டு களவானிகளை வச்சி செய்யும் கமல்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் புனீத்தின் மறைவு குறித்து தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மிஸ்கின் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்த அவர் ஒரு படம் குறித்து பேசினார். நான் பெங்களூரு சென்று அவரிடம் ஒரு கதையை கூறினேன். அவருக்கு அது பிடிந்திருந்தது. எனினும் அதை படமாக உருவாகவில்லை. அந்த கதைக்கு பெரிய தேவை என்பதால் அதை படமாக்குவது சாத்தியமில்லை என்பதை அவர் வெளிப்படையாக கூறினார். என்னை பார்ப்பதற்காக தன்னுடைய பார்க்கிங் பகுதிக்கு இறங்கி வரும் அளவுக்கு பணிவான மனிதராக இருந்தார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பிரிந்து சென்றோம். விரைவில் ஒரு படம் பண்ணலாம் என்று உறுதியேற்றுக் கொண்டோம். அன்புள்ள புனித், நீங்க வெறும் சினிமா ஹீரோ மட்டுமல்ல, நீங்க ஒரு உண்மையான ஹீரோ. உங்கள் அன்பு, பணிவு, நேர்மை ஆகியவற்றால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்களும், ரசிகர்களும் கிடைத்துள்ளனர். இயற்கை அன்னை தனது மடியில் உங்களை தவழ வைக்க விரும்பிய தூய்மையான குழந்தை நீங்கள். எங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களை நாங்கள் மிஸ் செய்வோம் புனித் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement