தாமரையின் காயின் திருட்டு விவகாரம் – கூட்டு களவானிகளை வச்சி செய்யும் கமல்.

0
5727
thamarai
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நான்காவது வாரத்தை நிறைவு செய்ய இருக்கிறது இதுவரை நமிதா மாரிமுத்து நாடியா அபிஷேக் என்று மூவர் வெளியேறி இருக்கும் நிலையில் இந்தவார நாமினேஷனில் 9 பேர் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் பஞ்ச தந்திர டாஸ்கில் வென்ற போட்டியாளர்கள் வைத்திருக்கும் காயினை பொறுத்தே இந்த வாரம் டாஸ்க்கும் அமைக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இந்த காயினை யார் வேண்டுமானாலும் திருடிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாமரை குளித்து முடித்து விட்டு உடை மாற்றும் போது பவானியும் சுருதியும் அதை பயன்படுத்தி தாமரை உடைய நாணயத்தை எடுத்துவிட்டார் சுருதி. இதனால் தாமரை பயங்கரமாக கோபம் அடைந்து இது மிகப்பெரிய கேவலமான செயல், நம்பிக்கை துரோகம், நான் நம்பி தானே வைத்தேன். நான் உடை மாற்றும்போது துண்டை மறைத்து என்னை ஏமாற்றி நாணயத்தை எடுப்பது மிகப்பெரிய துரோகம் என்று அழுது புலம்பி தள்ளினார்.

இதையும் பாருங்க : அச்சு அசலாக ரஜினியின் Vintage லுக்கில் இருக்கும் ரஜினியின் பேரன் – அதே ஸ்டைல், அதே தோற்றம்.

- Advertisement -

வீட்டில் உள்ள பலரும் தாமரைக்கு சப்போர்ட் செய்தார்கள். அதே சமயத்தில் பவானி நான் ஸ்ருதிக்கு நாணயம் எடுக்க உதவி செய்யவில்லை. தாமரை பாதி உடையில் இருந்தார். அதனால் நான் துண்டை எடுத்து மறைத்தேன். அதை தவிர நான் ஸ்ருதிக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று பவானி கூறினார்.அதற்கு வீட்டில் உள்ள பலரும் நீ எதற்கு அங்கே சென்றாய்? நீ எதற்கு துண்டு எடுத்து மறைத்தாய்? என்று பவானியை திருப்பி கேள்வி கேட்டார்கள்.

ஆனால், உண்மையில் சுருதியும் பாவனியும் திட்டம் போட்டே தான் தாமரை செல்வியின் காயினை தூக்கினர். இதுகுறித்து நெட்டிசன்கள் கூட குறும்படம் போட்டனர்.அதில் ஸ்ருதிக்கு பவானி உதவி செய்த காட்சிகளை பதிவிட்டு நெட்டிசன்கள் பவானியின் முகத்திரையை கிழித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரத்தில் கமலும் தலையிட்டு கேட்டு பாவனியை லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement