VPVS பார்ட் 2விற்கு நோ சொன்ன Sk எஸ் சொன்ன இயக்குனர் - பிரிந்ததா SK பொன்ராம் கூட்டணி. வைரலாகும் ட்வீட்.

By Rajkumar · 7/10/2021

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே முடியாது என்று சிவகார்த்திகேயன் கூறியதை தொடர்ந்து தற்போது அந்த படம் குறித்து படத்தின் இயக்குனர் பொன்ராம் ட்வீட் ஒன்றை போட்டிருக்கிறார். சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அதிலும் இவர் தேர்ந்தெடுக்கும் காமெடி கதைகள் பெரும்பாலும் ஹிட் தான்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

இதையும் பாருங்க : ஷங்கரின் மகளை பாத்துடீங்கா, மகனை பாத்தீங்களா. எப்படி வளந்துட்டார் பாருங்க (இவரும் நடிக்க வந்துருவாரோ)

இந்நிலையில் விரைவில் வெளியாக இருக்கும் டாக்டர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம் அவருடைய நடிப்பில் வெற்றியடைந்த படங்களின் இரண்டாவது பாகம் குறித்து சிலர் கேள்வி கேட்டார்கள். அதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றி நாங்கள் சும்மா தான் பேசினோம்.

ஆனால், அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களை அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதை திரும்ப எடுக்க முடியாது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2வை வேறு ஒரு நடிகரை வைத்து எடுப்பேன் என்று ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் பொன்ராம்.

அதில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 வருவது உறுதி, சிவகார்திகேயன் சார் maturity ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம் போட்றா வெடிய' என்று பதிவிட்டுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2வில் உங்கள் சாய்ஸ் யார் என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்.

behindtalkies AMP · Quick view
View full