ஷங்கரின் மகளை பாத்துடீங்கா, மகனை பாத்தீங்களா. எப்படி வளந்துட்டார் பாருங்க (இவரும் நடிக்க வந்துருவாரோ)

0
2979
shankar
- Advertisement -

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ஒரு மருத்துவர்.

இதையும் பாருங்க : கண்ணாடி முன் நின்று தன் முழு Baby Bump-ஐ ரசிக்கும் ஜெனி – குயூட் புகைப்படம் இதோ.

- Advertisement -

டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். அதே போல இளைய மகளான அதிதியும் மருத்துவ படிப்பை முடித்தவர் தான். இப்படி ஒரு நிலையில் இவர் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-118-728x1024.jpg

அதுவும் இவர் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார்.சூர்யாவின் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமாக இருக்கிறார் அதிதி. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜைகள் கூட நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையில் ஷங்கர் மகனும் கலந்து கொண்டு இருந்தார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement