Sk மற்றும் விஷாலுக்கு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனருக்கு Engagement – வெளியான புகைப்படங்கள் இதோ.

0
698
psmithran
- Advertisement -

சினிமா பத்திரிக்கையாளரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் திருமணம் செய்துகொள்ளும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்த கொண்டிருப்பவர் பிஎஸ் மித்ரன். இவர் 2018ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் விஷால் , சமந்தா, அர்ஜுன் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து இவர் ஹீரோ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அர்ஜுன் சர்ஜா, கல்யாணி பிரியதர்சன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி திரில்லர் பாணியில் உருவாகி இருந்தது.

- Advertisement -

மித்ரன் திரைப்பயணம்:

இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ், ரூபன் எடிட்டிங் செய்து இருந்தார். மேலும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ஆவார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சர்தார்.

சர்தார் படம்:

இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ‘சிறுத்தை’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் தான் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார். இவர்களுடன் ரஜிஷா விஜயன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரில் லக்ஷ்மன் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

-விளம்பரம்-

இயக்குனர் மித்திரன் திருமணம் செய்யும் நபர்:

மேலும், இந்த படம் கிரைம் திரில்லர் படமாக இந்த வருகிறது. இந்த படத்தில் லைலா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. பிஎஸ் மித்ரனுக்கும், சினிமா பத்திரிகையாளர் ஆஷாமீரா ஐயப்பனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இயக்குனர் மித்திரன் நிச்சியதார்த்த புகைப்படம் :

இதில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். தற்போது இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் மித்திரன்- ஆஷாமீரா ஐயப்பன் புது ஜோடிகள் உடன் எடுத்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

Advertisement