தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் ராஜகுமாரன். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ‘நீ வருவாய் என’ என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார். மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

இதனிடையே இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் நடிகை தேவயானியை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே ராஜகுமாரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 90ஸ் காலகட்டத்தில் சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
ராஜகுமாரன் குறித்த தகவல்:
தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது தேவயானி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் இவர் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் சினிமாவில் பெரிய அளவில் புகழ்பெறவில்லை என்றாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று மதிக்கமிக்க மனிதராகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ராஜகுமாரன் பேட்டி:
இது ஒரு பக்கம் இருக்க, இயக்குனர் ராஜகுமாரன் அவர்கள் சந்தானத்துடன் சேர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் காமெடி ரோலில் நடித்திருப்பார். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில்
ராஜகுமாரன், திருமதி தமிழ் என்ற படத்தில் நடிப்பதற்காக அவரிடம் கேட்டேன். ஆனால், அப்போது அவர்
முடியாது என்று விட்டார்.பின் அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார். அவர் செய்ததை நான் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் நான் அந்த படத்தில் நடித்தேன். அதோடு பழிவாங்கும் எண்ணம் என்னிடம் அப்போது இருந்தது. அதற்காகத்தான் நடித்தேன்.
View this post on Instagram
நடிப்பு பற்றி சொன்னது:
காரணம், தினகரன் என்ற பத்திரிகையில் நடிப்பு கிலோ என்ன விலைனு ராஜகுமாரன் கேட்கிறார் என்று எழுதி இருந்தார்கள். அதை நிரூபிப்பதற்காக தான் நடித்தேன். நடிப்பு என்பது
பொருளின் தன்மையை பொறுத்தது. அது கிராமமா, கிலோவா என்று சொல்ல முடியும்.
அப்படி தான் ஹீரோ உடைய கதாபத்திற்கு எப்படி நடிக்கணும் என்று ஒரு அளவு இருக்கிறது. காமெடியன் கதாபாத்திரம் என்று ஒரு அளவிருக்கிறது. அந்த படத்தில் நடித்த என்னுடைய நடிப்பை பார்த்து அவரே பாராட்டி இருந்தார் என்று கூறியிருக்கிறார்.






