சுப்ரமணியபுறம் படத்திற்கு முன்பாகவே விக்ரமின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள சசிகுமார். இதோ அந்த காட்சி.

0
18256
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் ஹீரோக்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இயக்குனராக இருந்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருபவர் நடிகர் சசி குமார். இந்த நிலையில் சசி குமார் இயக்குனராக அவதாரம் எடுக்கும் முன்னர் விக்ரமின் சேது படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பிறவி வருகிறது.

-விளம்பரம்-

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் இயக்குனர் சசிகுமார் நடிகராகவும் அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் ஈசன் என்ற ஒரே ஒரு திரைப்படத்தை மட்டும்தான் சசிகுமார் இயக்கியிருந்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் சசிகுமார். தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா,ராஜவம்சம் .பரமகுரு. எம்ஜிஆர் மகன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் பாலா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சேது. இந்த படத்தில் விக்ரம், அபிதா, சிவக்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கண்டது. விக்ரம் அவர்களின் திரை உலக பயணத்தில் இந்த சேது படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகர் சசி குமார் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம். மேலும், சசி குமார் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்து வரும் அமீர் கூட சேது படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இயக்குனர் அமீர், பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement