இயக்குனர் சீனு ராமசாமி தன் மனைவியை பிரிவதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகில் நடிகர்கள் தற்போது விவாகரத்து பெருவது தான் ட்ரெண்டிங்காக இருக்கிறது. அந்த வகையில், தனுஷ்- ஐஸ்வர்யா, நாக சைதன்யா-சமந்தா, ஜிவி பிரகாஷ்-சைந்தவி, ஜெயம் ரவி-ஆர்த்தி, ஏ.ஆர. ரகுமான் மற்றும் அவரது மனைவி என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது அந்தப் பட்டியலில் இயக்குனர் சீனு ராமசாமியும் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக சீனு ராமசாமி திகழ்கிறார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கூடல் நகர் என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார்.
சீனு ராமசாமி குறித்து :
மேலும், இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று'படம் 3 தேசிய விருதுகள் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'கோழிப்பண்ணை செல்லதுரை'.

கோழிப்பண்ணை செல்லதுரை:
இந்த படத்தில் ஏகன், யோகி பாபு, பிரகீடா, ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானசி கொட்டாச்சி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை அருளானந்தன் என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி இருந்தார்கள்.
சீனு ராமசாமி பதிவு:
இந்நிலையில் தற்போது இயக்குனர் ஸ்ரீ ராமசாமி தனது மனைவியை பிரிவதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அன்பானவர்களுக்கு வணக்கம், நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.
அறிவிப்பு
— Seenu Ramasamy (@seenuramasamy) December 11, 2024
.....................
அன்பானவர்களுக்கு வணக்கம்
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது…
விவாகரத்து குறித்து:
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். சீனு ராமசாமி இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவியாளராக பணியாற்றியவர். பல வெற்றி படங்களை இயக்கிய இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் வரிசையாக திரையுலகில் அனைவரும் விவாகரத்து அறிவித்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






