இந்தியன் 2வில் விவேக் நடித்த காட்சிகளை இப்படித்தான் மாற்றப் போகிறாராம் ஷங்கர். நல்ல ஐடியா தான்!

By Rajkumar · 24/4/2021

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விவேக்கின் இறப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் விவேக்குடன் ஒரு படங்களின் கூட நடிக்காத நடிகர் கமல் ஹாசன், விவேக் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று பதிவிட்டு இருந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1384001758288961542

விவேக் இத்தனை ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என்று பல்வேறு முன்னணி படங்களில் நடித்துவிட்டாலும் கமலுடன் நடிக்காதது ஒரு குறையாகவே இருந்தது. கமல் நடித்த 'தெனாலி' படத்தில் கூட நடிகர் விவேக் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிகர் விவேக்கால் நடிக்க முடியாமல் போனது. இப்படி ஒரு நிலையில் தான் கமலின் 'இந்தியன் 2' படத்தில் விவேக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : அண்ணன் அப்போ கொஞ்சம் 'Cringe' தான் போல - கேலிக்கு உள்ளான விஜய்யின் சமந்தா பற்றிய 2014 பதிவு.

முதன் முறையாக கமலுடன் நடிக்கிறோம் என்று மிகந்த மகிழ்ச்சியில் இருந்த விவேக்கிற்கு அந்த ஆசை நிறைவேறுதற்குள் காலம் முடிந்துவிட்டது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விவேக்கின் இறப்பால் இந்தியன் 2வில் அவரின் காட்சியை எப்படி மாற்றப் போகிறார்கள், இல்லை விவேக்கின் காட்சிகளை நீக்கிவிடுவார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சில நாட்கள் படமாக்கப்பட்ட விவேக்கின் காட்சிகள் தற்போது அவர் இல்லாததால் அடுத்த கட்டத்தை எப்படி எடுக்கலாம் என்று சிந்தித்து வருகிறார்களாம்.

https://www.youtube.com/watch?v=VTIoNJBrfi4

இப்படி ஒரு நிலையில் விவேக் வெளியூருக்கு சென்று விட்டார் என்பது போல அவரது காட்சியை முடித்து விடலாமா, அல்லது வேறொரு நபரை வைத்து விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை மீண்டும் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால், விவேக்கின் காட்சிகளை வேறு ஒரு நடிகரை வைத்து எடுத்துவிடலாம் என்று சங்கர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full