நாளை வியாழக்கிழமை தல ரசிகர்களுக்கு செம SURPRISE காத்திருக்கு .!

0
206
thala2

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைத்துள்ள படம் ‘விசுவாசம்’. வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சில பல காரணங்களால் அடுத்து ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

thala

இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த படத்தை பற்றிய அடுத்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவெனில் நாளை(23 ஆகஸ்ட், வியாழக்கிழமை) ‘விசுவாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அடுத்த செப்டம்பர் மாதம் 13 தேதி, அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று தான் வெளியிடபோவதாக படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால், நாளையே(வியாழக்கிழமை) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

thala1

இதற்கு முக்கிய காரணமே வியாழக்கிழமை, பாபா கடவுளுக்கு உகந்த தினம் என்பதாலும், அஜித் மற்றும் இயக்குனர் சிவா இருவரும் தீவிர பாபா பக்தர்கள் என்பதாலும் ‘விசுவாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வியாழக்கிழமையன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.