-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

என்னடா இப்படி பன்றான்னு திட்னாங்க – குஷி பட ஜோதிகா சீன் சீக்ரெட் சொன்ன இயக்குனர் SJ.சூர்யா.

0
1902

குஷி படத்தில் ஜோதிகாவின் இடுப்பு சீன் குறித்து எஸ் ஜே சூர்யா பகிர்ந்து இருக்கும் சீக்ரெட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டவர். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார். அப்படியே இவர் படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் எஸ் ஜே சூர்யா கதை கூறி இருக்கிறார். இவர் இயக்கிய வாலி படம் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். தனது முதல் படத்திலேயே எஸ் ஜே சூர்யா மாபெரும் நடிகரை வைத்து சூப்பர் டுபர் ஹிட்டை அளித்தார். அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது.

எஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா.

எஸ் ஜே சூர்யாவின் நடித்த படங்கள்:

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். பின் இவர் ஹீரோவாக இவர் நடித்து இருந்த மான்ஸ்டர் படம் மிக பெரிய அளவில் பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்து இருந்தது.

-விளம்பரம்-

எஸ் ஜே சூர்யா அளித்த பேட்டி:

கடைசியாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொம்மை. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது பல படங்களில் கமிட்டாகி எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் எஸ் ஜே சூர்யா அளித்த பேட்டியில் குஷி படம் குறித்து கூறியிருந்தது, குஷி படத்தில் ஏகப்பட்ட அமர்க்களமான காட்சிகள் எல்லாம் இருக்கிறது.

குஷி படம் குறித்து சொன்னது:

அதில் எல்லோருடைய ஃபேவரட் என்றால் ஜோதிகாவின் இடுப்பு சீன் தான். இந்த சீன் எடுப்பதற்கே எனக்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. விமானம் ஒன்று போகும்போது அந்த சீனை எடுக்கலாம் என்று ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன். என்னடா இவன் குளோசப் ஷாட் எடுக்க மூன்று நாள் காக்க வைக்கிறானே என்றெல்லாம் திட்டியிருந்தார்கள். இருந்தாலும், நான் நினைத்தபடி தான் அதை எடுத்தேன். அந்த பொறுமையும், உழைப்பும் தான் இன்று வரை எனக்கு மக்கள் மத்தியில் அடையாளத்தை கொடுத்திருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news