மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ் ‘நவரசா’. 9 கதைகள் கொண்ட இந்த சீரிஸ்ஸில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பார்வதி, ரேவதி, ரோகிணி எனப் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பது அபிநயங்களை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆந்தலாஜி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் காதல் என்ற தீமில் உருவாகி இருப்பது தான் கௌதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ .‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அச்சம் என்பது மடமையடா’ என தன்னுடைய முந்தைய படங்களை எல்லாம் கெளதம் மேனன் சரியான அளவில் சேர்த்து அரைத்து கொடுத்துள்ளது போல இருக்கிறது இந்த ‘கிட்டார் கம்பி மேலே நின்று’. 

Advertisement

நவராசா சீரிஸ்ஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பகுதி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மியூசிக்கல் சப்ஜெட்டில் கதை சொல்கிறேன் என்று திரைக்கதையில் எந்த ஸ்வாரஸ்யத்தையும் வைக்காமல் வெறும் வசனத்தை மட்டுமே வைத்து நகர்கிறது இந்த சீரிஸ். இப்படி ஒரு நிலையில் இந்த சீரிஸ்ஸை எடுத்ததற்காக கௌதம் மேனனை கழுவி ஊற்றி இருக்கிறார் இளம் இயக்குனர் லீனா மணிமேகலை.

லீனா மணிமேகலை இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான மாடத்தி திரைப்படம் பெரும்பாலானோர் தவறவிட்ட ஒரு தரமான படம் என்று தான் சொல்ல வேண்டும். நீஸ்ட்ரீம் எனும் ஒடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லீனா,இதுபோன்ற கேவலமான கதையை எடுப்பதை நிறுத்துங்கள் என்று கௌதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ சீரிஸ்ஸை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Advertisement

Advertisement
Advertisement