பொதுவாகவே கடைகளில் வேலை புரியும் ஊழியர்கள் காலையிலிருந்து இரவு வரை நின்று கொண்டே பணி புரியும் அவல நிலை அனைவரும் அறிந்த ஒன்றே. இது குறித்து பல படங்களில் விழிப்புணர்வு வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு கடைகளில் நின்று கொண்டே பணி புரியும் ஊழியர்களுக்கு இருக்கைகள் அமைக்க வேண்டும் என புதிய சட்டத்தை கொண்டு உள்ளது. தற்போது இந்த தகவல் குறித்து இயக்குனர் வசந்தபாலன் பாராட்டி உள்ளார்.

சட்டசபையில் இன்று அமைச்சர் திட்டக்குடி கணேசன் அவர்கள் நகைக்கடை, ஜவுளிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட பல வணிக கடைகளில் நின்றுகொண்டே பணிபுரியும் ஊழியர்களின் அவல நிலையை பற்றி பேசியுள்ளார். அதோடு அவர்களுக்கு இருக்கைகள் வழங்க வேண்டும் என்று ஒரு புதிய சட்ட முன்வடிவை கொண்டு வந்துள்ளார். மேலும், இந்த சட்டம் வரும் 13ம் தேதி சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த புதிய சட்டத்தை குறித்து தமிழக அரசின் அனைத்து கட்சி தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் பாருங்க : டேய் வாடா கட்டி புடிச்சிக்கோ – முகத்தில் இருந்த தேம்பலால் தயங்கி நின்ற நபரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள VJS

Advertisement

இந்த நிலையில் இது குறித்து அங்கடி தெரு திரைப்படத்தின் தலைவர் இயக்குநர் வசந்தபாலன் சோசியல் மீடியாவில் கருத்து ஒன்று போட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படம் தான் அங்காடிதெரு. இந்த படம் முழுக்க முழுக்க ஜவுளிக் கடையில் நடக்கும் நிலைமையும், ஏழை மக்களின் நிலைமை குறித்து சொல்லப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் நின்று கொண்டே வேலை செய்தால் கால்களில் வெரிகோஸ் என்ற நோய் ஏற்படும் எனவும் அவர் அழகாக கூறியிருந்தார்.

இது குறித்து தற்போது வசந்தபாலன் கூறியது, தமிழக அரசுக்கு நன்றி.என் அங்காடித்தெரு திரைப்படத்தின் கனவு மெல்ல மெல்ல நிறைவேறுகிறது. அங்காடித் தெரு திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் ஏற்படக்கூடிய வெரிக்கோஸ் நோய் பற்றி கூறியிருப்பேன் உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் மிக மிக அவசரம் என்ற படத்தில் கூறப்பட்டிருந்தது போல் பெண் போலீசாரை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இப்படி தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் சோசியல் மீடியாவில் தமிழ்நாடு அரசுக்கு பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement