பிறந்த நாளன்று முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

By Rajkumar · 10/10/2018
இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட் தான்.ஆரம்பத்தில் நடிகராக இருந்த வெங்கட் பிரபு பின்னர் "சென்னை 28" மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். https://www.instagram.com/p/BouP871hq-b/?hl=en&taken-by=venkat_prabhu தற்போது சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2011 ஆம் ஆண்டு நடன ஆசிரியை சரசா என்பவற்றின் வளர்ப்பு மகளான ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஷிவானி என்ற மகளும் பிறந்தார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் ஷிவானி தனது 16 வது பிறந்தநாளை கொண்டாடினர். தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வெங்கட் பிரபுவின் பதிவில் பல்வேறு நடிகர்களும் ஷிவானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலரோ வெங்கட் பிரபுவிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று ஆச்சர்யபட்டும் வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full