என் பொண்ணு டாக்டர் ஆனதுக்கு காரணம் இதான், வெற்றிமாறன் படிக்காமல் போன காரணமும் இதான் – வெற்றிமாறன் அம்மாவின் பேட்டி.

0
742
vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பின் தான் வெற்றி மாறன் இயக்குனராக களம் இறங்கினார். பெரும்பாலும் வெற்றிமாறன்– தனுஷ் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே தாறுமாறு. சமீபத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான “அனல் மேல்பனித்துளி” படத்தை இயக்கியிருந்தார். இப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

இந்நிலையில் தான் வெற்றிமாறனின் தாய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் அதில் தன்னை பற்றியும் தன்னுடைய மகளை பற்றியும் கூறினார். அவர் பேசுகையில் “என்னுடைய குடும்பத்தில் நான்தான் ட்ரெண்ட் செட்டர். அதிகமாக படித்தது, வேலைக்கு போனது, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி சமுதாயத்தில் முன்னேறி வந்தேன். அதேபோல என்னுடைய மகளையும் மருத்துவராக வேண்டும் என்று குறிக்கோளாக படிக்க வைத்தேன்.

- Advertisement -

அவர் தற்போது மருத்துவராக எம்பிபிஎஸ் டிமார்ட்டில் இருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் மட்டும் படிக்காததற்கு காரணம் அவனுடைய விருப்பம்தான். நான் பிள்ளைகளின் விருப்பத்திற்கு கேட்டு தான் எதையும் செய்வேன் அந்த விருப்பம் எனக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் வெளிப்படையாகவே சொல்லுவேன் அவர்கள் அதனை செய்ய மாட்டார்கள்.இந்நிலையில் என்னுடைய பெண்ணை நான் படிக்க வைத்த காரணம் ஒரு பெண் படித்து பொருளாதார ரீதியாக தன்னுடைய காலில் நின்றால் தான் அந்த பெண்ணால் நிறைவாக முடியும்.

ஏனென்றால் எங்களுடைய காலத்தில் நாங்கள் எல்லாம் பொருளாதார அடிமைகள். எந்த விஷயமாக இருந்தாலும் அப்பா, கணவன் என்றே இருந்து சலிப்படைந்து விட்டது. அப்போதுதான் நினைத்தேன் நம்முடைய குடும்பத்தில் ஒரு பெண் சுயமான காலில் நின்று சம்பாதிக்க வேண்டும் என்று. எந்த ஒரு விஷயத்திற்கு அப்பாவையே, தம்பியையோ, அம்மற்ற யாரையுமே சார்ந்து இருக்காமல் சுயமாக இயங்கவும், மக்களுக்கு சேவை செய்யவும் தான் என்னுடைய பெண்ணை படிக்க வைத்தேன் என்று கூறினார் வெற்றிமாறனின் தாய் மேகலா சித்ரவேல்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் “அனல் மேல் பனித்துளி” படத்தை பற்றி பேசிய வெற்றிமாறன் இந்த படத்தில் நடந்து போன்ற ஒரு விஷயம் என்னுடைய அக்காவிற்கு நடந்திருகிறது என்று கூறினார். அப்போது என்னுடைய அக்கா 9வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் நான் 6வது படித்து கொண்டிருந்தேன். அப்போது அந்த பள்ளியில் ஆசிரியர் தகாதவாறு நடந்து கொண்டார். அந்த விஷியத்தை என்னுடைய அக்கா `அப்பா அம்மா யாரிடமும் சொல்லவில்லை என்னிடம் தான் சொன்னார் அப்போது எனக்கு பயங்கரமான கோவம் வந்தது.

நாங்கள் அவனிடம் தான் டியூஷன் சென்று கொண்டிருந்ததோம் பின்னர் டியூஷன் நிறுத்தப்பட்டது ஒருவேளை அக்கா என்னுடைய பெற்றோர்களிடம் இதனை சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன், அதற்கு பிறகு என்ன நடந்தது என நாபாகம் இல்லை என்று வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது வெற்றிமாறனின் அக்கா இந்த கஷ்டங்களை எல்லாம் தண்டி தற்போது எம்பிபிஎஸ் டிமார்ட்டில் துறையில் மருத்துவராக இருக்கிறார்.

Advertisement