டீ கடை சந்திப்பு, 10 வருடம் வைட்டிங்கில் காதல் – வெற்றிமாறன் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்.

0
291
vetrimaran
- Advertisement -

வெற்றிமாறனின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மத்தியில் மாபெரும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் இவர் தனுஷை வைத்து இயக்கிய படம் மூலம் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது. இயக்குனர் பாலு மகேந்திராவிடம் இவர் உதவி இயக்குனராக இருந்தார். பின் வெற்றி மாறன் பல படங்களில் மற்றும் தொடர்களில் துணை இயக்குனராக பணியாற்றறி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு பின் 2007 ஆம் ஆண்டு தனுசை வைத்து பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். அதோடு இந்த படத்திலேயே வெற்றி மாறனுக்கும் தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் உதயம், காக்கா முட்டை, வடசென்னை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார். இறுதியாக தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘இனி எப்போது இந்த முகத்தை காண்பேன்’ தகன மேடையில் தன் கணவருக்கு கடைசி முத்தம் கொடுத்து கதறி அழுத மீனா – உருக்கமான வீடியோ.

டீ கடையில் ஏற்பட்ட சந்திப்பு :

வெற்றிமாறன் அவர்கள் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெற்றிமாறன் மனைவி பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் பேசிய அவர் ‘அவரை நான் முதன் முதலாக சென்னையில் உள்ள ஒரு தேனீர் கடையில் தான் சந்தித்தேன். ஆனால், அவர் என்னை கண்டு கொள்ளவே இல்லை. சில நாட்களில் எனக்கு அவரை பிடித்து போனது. முதன் முதலில் நான் தான் அவரிடம் என்னுடைய காதலை சொன்னேன். ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள 10 வருடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் சரி என்று கூறினார்.

-விளம்பரம்-

வெற்றிமாறன் போட்ட கண்டிஷன் :

நானும் சரி என்று ஒத்துக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் அவர் உனக்கு திடீரென்று மனசு மாறினால் நீ வேறு ஒரு கல்யாணம் செய்து கொள் எனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார். பின் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கினோம். எனக்கு ஹைதராபாதில் வேலை கிடைத்தது. என்னால் அவரை விட்டு பிரியமுடியாமல் வேலைக்கு போக மாட்டேன் என்று சொன்னேன். அதற்கு அவர் உன்னுடைய கனவையும், என்னுடைய கனவையும் இந்த காதல் கலைப்பதாக இருந்தால் நாம் காதலிப்பதை நிறுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.

வெற்றிமாறன் மனைவி மற்றும் மகள் :

உடனே நான் வேலைக்கு சென்று விட்டேன். அவர் அப்படி சொன்னால் தான் இன்று நான் என்னுடைய கம்பெனியில் ஜெனரல் மேனேஜராக இருக்கிறேன். அவர் சொன்னதை போல் 8 வருடங்களுக்கு பிறகு தான் எங்கள் திருமணம் நடந்தது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் வெற்றி மாறனின் மனைவி மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் முன்பு இருந்ததற்கும் தற்போதும் அடையாளம் தெரியாத அளவு மாறி இருக்கிறார் அவரின் மனைவி.

வெற்றிமாறனின் அடுத்தடுத்த படங்கள் :

தற்போது வெற்றிமாறன் சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதை தொடர்ந்து சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் வெளியாகி இருந்தது.

Advertisement