தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
விஜய் குறித்த தகவல்:
மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற்று இருந்தது. மலேசியாவே மிரள வைக்கும் அளவிற்கு இந்த விழாவை நடத்தி இருந்தார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. தற்போது ஜனநாயகன் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விக்ரமன் வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்ரமன் அவர்கள் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சூர்யா- லைலா நடித்த உன்னை நினைத்து படம் மிக பெரிய அளவில் வரவேற்க்கப்பட்டது. இந்த படம் சூர்யாவின் கேரியரிலேயே ஒரு முக்கிய படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் முதலில் விஜய் தான் கமிட் ஆகி இருந்தாராம்.
View this post on Instagram
உன்னை நினைத்து படம்:
விஜயை வைத்து இரண்டு பாடல்களை இயக்குனர் விக்ரமன் எடுத்திருக்கிறார். அதில் ஒன்று தான் என்னை தாலாட்டும் பாடல். பின் அந்த வீடியோவில் விக்ரமன், "என்னை தாலாட்டும் "பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் Social மீடியாவில் வைரல் ஆனது. இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன். அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஓன்று கிடைத்தது. மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு post செய்கிறேன் என்றார்.






