தவறான சிகிச்சையால் 5 வருடங்களாக படுத்த படுக்கையான இயக்குனர் விக்ரமனின் மனைவி – நெஞ்சை உருக்கும் சோகம்.

0
724
- Advertisement -

இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு ஏற்பட்டு இருக்கும் உடல் பிரச்சினை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான கதை மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

-விளம்பரம்-

முதல் படத்திலேயே இவர் தமிழக அரசின் சிறந்த இயக்குனர், சிறந்த படத்திற்கான விருதை தட்டி சென்றிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல, பிரியமான தோழி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பல பிரபலமான நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விக்ரமன் திரைப்பயணம்:

குறிப்பாக, இதில் பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமில்லாமல் சரத்குமார் நடிப்பில் வெளிவந்திருந்த சூரியவம்சம் படமும் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வசூல் சாதனையும் செய்து இருந்தது. மேலும், இவருடைய இயக்கத்தில் வந்த படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் ஆக இருக்கிறது. கடைசியாக இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை.

விக்ரமன் அளித்த பேட்டி:

இது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பினார்கள். பின் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்ரமன், என்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இதனால் தான் நான் படங்களை இயக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பலருமே விக்ரமனின் மனைவிக்கு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் தற்போது விக்ரமனின் மனைவிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

விக்ரமனின் மனைவி குறித்த தகவல்:

விக்ரமனின் மனைவி பெயர் ஜெயப்பிரியா. இவர் குச்சிப்புடி நடன கலைஞர். இவர் இதுவரை சுமார் 4000 மேடைகளில் நடனம் ஆடி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் இவருக்கு சிகிச்சை அளித்தார்கள். ஆனால், அளிக்கப்பட்ட சிகிச்சை(medical error) தவறாக கொடுக்கப்பட்டது. இதனால் ஐந்து வருடங்களுக்கு மேல் விக்ரமனின் மனைவி ஜெயபிரியா படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் தன்னுடைய வேலையை கூட செய்ய முடியாத நிலைமைக்கு போனார்.

விக்ரமன் மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சனை:

இன்னொரு பக்கம் விக்ரமனின் உடைய மகன் கனிஷ்கா சினிமாவில் பிஸியாக இருக்கிறார். இதனால் குடும்பம், மனைவி பார்த்துக் கொள்வதில் விக்ரமனுக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. தற்போது விக்ரமனின் மனைவி ஜெயபிரியா கிட்னி பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தன்னுடைய மனைவியின் சிகிச்சைக்கு சொத்துக்கள் எல்லாம் விற்று தான் விக்ரமன் கவனித்து வருகிறார். அதோடு தன்னுடைய மனைவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விக்ரமன் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலுமே கலந்து கொள்வதில்லை.

Advertisement