தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் உச்ச நட்சத்திரங்கள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு சினிமா துறையிலும் பல்வேறு பிரபலங்களும் தீவிர ரசிகராக இருந்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே நடிப்பையும் தாண்டி அஜித்தின் நல்ல குணம் தான்.

அஜித்துடன் பணியாற்றிய பலரும் அவரை பற்றி புகழ்ந்து தான் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி வரும் இயக்குனர் வினோத் அஜித் குறித்த பல்வேறு விடயங்களை ஆனந்த விகடன் பத்திரிகையில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

அந்த பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ள வினோத், அஜித்தின் எளிமை கண்டு நான் மிகவும் ஆச்சார்யபட்டுளேன். படப்பிடிற்குள் நான் சென்றதும் அவர் எழுந்து நின்று என்னை அமர சொல்வார். இந்த மரியாதை எனக்கு மட்டும் இல்லை அங்கு பணிபுரியும் லைட் மென் முதல் அனைவரையும் அவர் அப்படி தான் ட்ரீட் செய்வார்.

அஜித்தை பற்றி தெரியாத பல விஷயங்கள் உள்ளது, அவர் தினமும் சாப்பாடு கட்டிக்கொண்டு எம் ஐ டி க்கு போய் பசங்களுக்கு ட்ரோன் சம்மந்தமான கிளாஸ் எடுக்கிறார். எப்போதும் அவரை பிசியாக வைத்துக் கொள்கிறார். சமீபத்தில் எனக்கு தெரிந்தவரை சந்தித்த போது அவர் எனக்கு ஒரு விஷத்தை சொன்னார்.

Advertisement

ஒரு முறை அவரது வீட்டில் போன் வேலை செய்யாமல் போய்யிருக்கு அப்போது அதை பழுது செய்ய டெலிபோன் டெபார்ட்மெண்ட்ல இருந்து ஒருத்தர் வந்திருக்கார். அஜித் சாரோட வீடுன்னு தெரிஞ்சதும் அந்த நபர் ‘எதாவது கவனிங்க’ னு சொல்லி இருக்காரு. இத கேள்விபட்டு அந்த நபரை அழைத்து அஜித், உங்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கறாங்க இல்ல அப்புறம் ஏன் காஸ் கேக்குறீங்க. உங்க வேலைய சரியா பண்ணுங்க, இப்படி காஸ் எல்லாம் கேக்க கூடாதுனு சொல்லி அனுப்பிருக்கார்.

Advertisement

அந்த நெகிழ்ந்து போய் ‘இனி யார்ட்டயும் காஸ் கேக்க மாட்டேன் சார்னு’ சொல்லிட்டு கிளம்பி இருக்கார். அதுக்கப்புறம் ஒரு ஆறு மாசம் கழிச்சி தனது மேனேஜரிடம் அஜித் சார் ‘அந்த போன் ஆபரேட்டர் தனக்கு 2 பெண் குழந்தை இருக்குனு சொன்னரே அவங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட ஏதவது உதவி வேணுமான்னு கேளுங்கனு கேட்டு அவங்களுக்கு பீஸ் கட்டி இருக்காரு. வெறும் 500 ரூபாய் டிப்ஸ் தர மறுத்த அஜித், குழந்தைங்களுக்கு பீஸ் கட்டி இருக்காரு இப்படியான நபர் தாங்க அஜித்னு மிகவும் பெருமையாக கூறியுள்ளார் அஜித்.

Advertisement