விஷ்ணு வர்தன்,கிருஷ்ணாவின் தந்தை மரணம் – அட, இந்த நடிகர் தான் இவர்களது தந்தையா.

0
526
Vishnuvardhan
- Advertisement -

பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தை காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக திகழ்பவர் விஷ்ணுவர்தன். அஜித்தின் ஆரம்பம், பில்லா உட்பட சில படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவருடைய சகோதரர் தான் கிருஷ்ணா. இவரும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார்.

-விளம்பரம்-

கழுகு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் கிருஷ்ணா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோர்களின் தந்தையான பட்டியல் சேகர் காலமாகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

பட்டியல் சேகர் குறித்த தகவல்:

விஷ்ணுவர்தனின் தந்தை பெயர் சேகர். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டியல் என்ற படத்தை தயாரித்தவர் சேகர். அதோடு இந்த படத்தில் இவர் நடித்து இருக்கிறார். இதனாலே இவர் பெயர் பட்டியல் சேகர் என்று மாறிவிட்டது. அது மட்டும் இல்லாமல் இவர் ராஜதந்திரம் என்ற படத்தில் அதிரடி வில்லனாக நடித்து இருந்தார்.

பட்டியல் சேகர் உடல்நிலை:

அதோடு கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த கழுகு மற்றும் அலிபாபா போன்ற படங்களை தயாரித்து இருந்தார்.
இந்த நிலையில் சில நாட்களாகவே பட்டியல் சேகர் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் இவர் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இப்படி ஒரு நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பட்டியல் சேகர் காலமாகி இருப்பதாக அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

பட்டியல் சேகர் மறைவு:

மேலும், பட்டியல் சேகர் அவருடைய மகன்களாக இயக்குனர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணா ஆகியோர்களுக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பட்டியல் சேகர் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டு இருக்கின்றது. திரையுலகினர் மற்றும் பொதுமக்களும் பட்டியல் சேகருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு 69 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement