தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆனவர் விசு. விசு அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்டவர். இவர் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன். இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்போதே இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின் ரஜினியின் தில்லு முல்லு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகர் விசு அவர்கள் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மணல் கயிறு, ரகசியம், புதிய தொடர்ந்து போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

Advertisement

விசு படம் என்றால் கூட இன்னும் சலிப்பு தட்டாது. அந்த அளவிற்கு இயல்பான குடும்ப கதைகளை கொடுத்தவர். இவர் கடைசியாக தங்கமணி ரங்கமணி என்ற படத்தை இயக்கி உள்ளார். இவர் சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் உள்ளார். இந்நிலையில் விசு அவர்கள் நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடர்வதாக சர்ச்சை எழுந்து உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் 1981ஆம் ஆண்டு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். இந்த படத்தில் லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார்.

இதையும் பாருங்க : ரஜினி கண்டக்டராக இருந்த போது எனக்கு சீட் போட்டு வைப்பார். ஆனால், இப்போது வரை -சர்க்கஸ் ஜோக்கர் செளத்ரி

பாலச்சந்திரன் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும், ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பதாகவும் கூறி உள்ளார். தனுஷ் இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை தொடங்கி இருப்பதாகவும், தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சில மாற்றங்கள் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தை இயக்குவது யார் என்று பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தனது அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக்கூடாது என்று இயக்குனர் விசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது விசு கூறியது, தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் எல்லாம் பொய் என்று சொன்னால் நான் கண்டுகொள்ள மாட்டேன். உண்மையாக இருந்தால் இந்த படத்தின் தயாரிப்பாளர் கவிதாலயாவிடம் உரிமம் வாங்குவதை விட இந்த படத்தின் கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பது சரியாக இருக்கும். என்னிடம் உரிமை பெறாமல் நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் நான் வழக்கு தொடருவேன் என்று கோபமாக கூறியுள்ளார். இப்படி விசு அவர்கள் பேசிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement