சில்க்கின் வாழ்க்கை வரலாறு – மறுத்த நடிகை, விருப்பம் தெரிவித்த இரண்டு நடிகைகள். யார் யார் தெரியுமா ?

0
427
silk
- Advertisement -

பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு என்ற சொற்றொடர் கனகச்சிதமாக பொருந்துவது சில்க் ஸ்மிதா என்ற நடிகைக்குத்தான். தமிழ் திரை உலகில் சில ஆண்டுகளே நடித்திருந்தாலும் மறைந்து இரண்டரை தசாப்தங்களுக்குப் பிறகும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ஆச்சரியங்களும் சுவாரஸ்யங்களும் நிரம்பியது. ஆந்திர மாநிலத்தில் விஜயலட்சுமியாகப் பிறந்த சில்க் வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நடிகை சில்க் ஸ்மிதாவை ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு எதிரில் சந்தித்த இயக்குநர் வினுசக்கரவர்த்தி ’வண்டிச்சக்கரம்’ என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் சாராய வியாபாரியாக நடிக்க விஜயலட்சுமிக்கு வாய்ப்பு வழங்கினார்.

-விளம்பரம்-

தன்னுடைய திரை பெயரை ஸ்மிதா என மாற்றிக்கொண்ட விஜயலட்சுமி, முதல் படத்தில் அவருக்கு புகழ் சேர்த்த சில்க் என்ற பெயரையும் உடன் சேர்த்துக்கொண்டார். முதல் படத்திற்கு பின்னரே நடிகை சில்க் ஸ்மிதாவிற்கு தமிழில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. அன்றைய தேதியில் தமிழில் உருவான எல்லா திரைப்படங்களிலும் சில்க் ஸ்மிதா கட்டாயம் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும் விற்பனைளார்களும் விரும்பினர். இதன் காரணமாக குறுகிய காலகட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் சில்க் சுமிதா.

- Advertisement -

கவர்ச்சியும் தான்டி நடிப்பிலும் தெறிக்க விட்ட சில்க் ஸ்மிதா :-

மிகக் குறுகிய வாய்ப்புகளே நடிக்க கிடைத்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் நடிப்பில் துவம்சம் செய்தார் சில்க் ஸ்மிதா. பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, நேற்று பெய்த மழையில், மூன்றாம் பிறை என சில்க் ஸ்மிதா கவர்ச்சி கடந்து நடிப்பிலும் முத்திரை பதித்தார். தமிழைக் காட்டிலும் மலையாள திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டிய சில்க் ஸ்மிதா, மலையாள திரையுலகில் நடிக்க வாய்ப்புடைய கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதாக எண்ணினார். கவர்ச்சி நடிகையாக இருந்ததால் பலரின் பாலியல் சீண்டல்களுக்கும் ஆளான சில்க் ஸ்மிதா, ஆண்களால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பலமுறை பொதுவெளியில் பேசியுள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் மரணம் :-

மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் திரைத்துறையில் இருந்து ஒதுங்கியே இருந்த சில்க்ஸ்மிதாவின் வாழ்வில் பல மர்மங்களும் சர்ச்சைகளும் ஒளிந்துள்ளன. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா மரணமடைந்து ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாரும் பெற்றுக்கொள்ள ஆளில்லாத அனாதைப் பிணமாக வைக்கப்பட்டிருந்தார். தகவல் கிடைத்த பின்னரே அவரது உறவினர்களும் பெற்றோரும் வந்து சில்க் சுமிதாவின் உடலைப் பெற்றுக்கொண்டனர். எனினும் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் சில்க் ஸ்மிதா கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

-விளம்பரம்-

டர்ட்டி பிக்சர் சில்க் சுமிதாவின் வாழ்க்கை படம் :-

இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிபடங்களிலும் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்து அன்றைய காலகட்டகளில் சினிமாவை ஆட்டி வைத்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை அதையே தழுவி ஏக்தா கபூர் அவர்களின் தயாரிப்பில் வித்யா பாலன் நடிப்பில் ஹிந்தியில் 10 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் தான் ” டர்ட்டி பிக்சர் “. இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக செய்திகள் வந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை எழுதும் பொறுப்பை கதையாசிரியர் கனிகா தில்லானிடம் கொடுத்துள்ளார் ஏக்தா கபூர். இந்த படத்தின் முதல் பாகத்தில் கதையாரியராக பணியாற்றியவர் ரஜத் அரோரா அவர் இந்த படத்தில் கதாசிரியராக இடம் பெறாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

டர்ட்டி பிக்சர் இரண்டாம் பாகம் :-

இந்த படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியாக வித்யா பாலன் அவரது சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்தது ” டர்ட்டி பிக்சர் ” தான். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கம் நிலையில் அவரது பெயர் குறிப்பிடப்படாமல் இருப்பது சர்ச்சையை உண்டாக்கிறது. மேலும் ஏக்தா கபூர் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக கங்கனாவை தொடர்பு கொண்டதாகவும் கங்கனா இந்த படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் மாற நடிகை டாப்ஸியும், கீர்த்தி சனாவும் இந்த படத்தில் நாங்கள் நடிக்கிறோம் என்று தங்கள் விருப்பத்தை கூறியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. ஆனால் பத்து வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதால் இரண்டாம் பாகத்தின் கதை போக்கு எப்படி இருக்கும் யார் நடிப்பார்கள் என தெளிவாக தெரியவில்லை.

Advertisement