பிரபல தொலைக்காட்சியான டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் மேன் வெர்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காடுகளில் தனியாக மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் கையில் கிடைத்த பொருட்களை வைத்தும் காடுகளில் கிடைத்ததை உண்டு எப்படி உயிர் வாழ வேண்டும் என்ற யுத்தியை இந்த நிகழ்ச்சியில் காட்டினார் பேர் கிரில்ஸ். அதே போல மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் உள்ள காடுகளில் எடுக்கப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பானது.

இதனால் நிகழ்ச்சியில் இந்திய அளவில் பிரபலமானது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் பிரதமரான ஒபாமா கூட கலந்து கொண்டார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இந்திய பிரதமர் மோடி பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிலையில் மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு மைசூர் மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்றது.

இதையும் பாருங்க : ‘தல பைக் ஓட்டுவதில் அவர் மாஸ், அவர ஊரே ஒட்டுறதுல அவர் தமாஷ் – இப்படி சொன்னவர் தற்போது மாஸ்டர் படத்தில்.

Advertisement

இந்த நிலையில் ரஜினி, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து டிஸ்கவரி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் பிரபலமான இந்தியர்களை கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் பங்கேற்றதில் நாங்கள் மகிழ்கிறோம். அவர் டிஸ்கவரி சேனல் விவாதத்தில் கலந்து கொண்டார். பியர் கிரில்ஸுடன் வனப்பகுதிக்கு சென்றார். அவர் நீர் பாதுகாப்பு குறித்து அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பு, நீர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து

இந்த நிகழ்ச்சியில் ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பேர் கிரில்ஸ், பேர் கிரில்ஸ் ரஜினியை சந்தித்தது குறித்து ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு , “பிரதமர் மோடி உடனான நிகழ்ச்சி, தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்தது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி என்னுடைய Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில் இணைந்துள்ளார் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement