தினமும் இது வேண்டாம்..! காதலரை பிரிந்த சுந்தர்.சி பட நடிகை.! இதுக்கா பிரிஞ்சாங்க

0
811

சினிமா துறை பொறுத்த வரை நடிகர் நடிகைகளின் காதல் குறித்த பல கதைகளை நாம் கேட்டுள்ளோம். அதிலும் இந்தி சினிமா துறையில் காதல் கிசுகிசுவிற்கு பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் இந்தி சினிமா துறையில் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடிகள் தற்போது பிரிந்துள்ளனர்.

Tiger Shroff

இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தோனி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல மடைந்தவர் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக பிரபல ஹிந்தி நடிகர் டைகர் ஷ்ராஃப் என்பவரை காதலித்து வந்தார்.

இருவரும் ஒருவரை ஒருவர் மிக நன்றாக பார்த்துக்கொண்டு வந்தனர். 3 வருடங்களில் நடிகர் டைகர் ஷ்ராஃப், திஷாவின் வீட்டில்தான் பெரும்பாலும் தங்கி வந்தார். மேலும்,தனது காதலி திஷா படப்பிடிப்பில் இருந்தால் தன் வீட்டில் இருந்து சாப்பாடு அனுப்பி வைப்பார் டைகர் ஷ்ராஃப். நடிகர் டைகர் ஷ்ராஃப்பின் காதலுக்கு வீட்டில் உள்ள அனைவரும் சம்மதிக்க நடிகர் டைகர் ஷ்ராஃப்பின் அம்மா மட்டும் நோ சொல்லி இருக்கிறார்.

Tiger-Shroff

Tiger-Shroff-Disha-Patani

இருப்பினும் இருவரும் காதலித்து வந்துள்ளனர் ஆனால், கடத்த சில காலமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இனிமையாக சென்று கொண்டிருந்த இவர்களது காதலில் சண்டை முற்றிப்போக இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது இருவரும் நடிப்பில் அவரவர் வேலையை பார்த்து வருகின்றனர் என்று பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.