கல்லூரி நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடை போட்டு வருவீங்க ? – கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள். சர்ச்சையில் சிக்கிய திவ்ய பாரதி

0
545
divyabarathi
- Advertisement -

கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள திவ்ய பாரதி சென்றது தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சமீபத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘பேச்சுலர் ‘. இந்த படத்தை இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் திவ்யா பாரதி, முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மற்றும் ஜான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரிதயாரித்திருந்தனர்.

-விளம்பரம்-

இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக திவ்யா பாரதி என்பவர்நடித்து இருந்தார். இவர் பிரபல மாடல் ஆவார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் தற்போது இளைஞர்களின் கிரஸ் ஆகவே திவ்யபாரதி திகழ்கிறார் என்று சொல்லலாம்.

- Advertisement -

முகேன் படத்தில் திவ்ய பாரதி :

இந்த படத்தை இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக முகென் நடித்திருக்கிறார். இதற்கு முன்பு இவர் வேலன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், நிழல்கள் ரவி, அனுஹாசன், சுப்பு பஞ்சு என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

கவர்ச்சியில் தாராளம் காட்டும் திவ்யபாரதி :

இந்த படம் மே மாதம் திரைக்கு வெளியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படி பிரபல மாடல் ஆன திவ்யா இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாடல் ஆக இருந்ததால் இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

இன்ஸ்டாவில் குவியும் பாலோவர்ஸ் :

அதில் தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷூட் புகைப்படங்கள் எல்லாம் பகிர்ந்து உள்ளார். சமீபத்தில் கூட இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் தொடர்ந்து பல விதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனாலேயே இவரை சமுக வலைதளத்தில் பின் தொடரும் நபர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.

கல்லூரி நிகழ்ச்சியில் திவ்ய பார்தி :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கல்லூரி ஒன்றில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்திரனராக திவ்ய பாரதி கலந்துகொண்டார். அதில் படு கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தார் திவ்ய பாரதி. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவ பல சமூக ஆர்வலர்களும் கல்லூரி நிகழ்ச்சிக்கு இப்படியா உடை அணிந்து செல்வது என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால், மேலும் சிலரோ நடிகையை அழைத்தால் இப்படி தான் வருவார்கள் இதில் என்ன இருக்கிறது என்று சிம்பிளாக கூறி வருகின்றனர்.

Advertisement