ஷூட்டிங்ல சின்ன பசங்க கூட Tesla அக்கானு கூப்டப்ப – மனவேதனையில் பேசிய திவ்யா துரைசாமி.

0
527
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் திவ்யா துரைசாமி. இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பின் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த மதில் என்ற படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
divya

பின் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த குற்றம் குற்றமே என்ற படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இருந்தாலும், இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது 2022 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த எதற்கும் துணிந்தவன் படத்தின் மூலம் தான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து இவர் சஞ்சீவன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

திவ்யா துரைசாமி நடித்த படம்:

தற்போது இவருடைய நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

டெஸ்லா குறித்த சர்ச்சை:

இது ஒரு பக்கம் இருக்க, இவரை எல்லோரும் தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என்றெல்லாம் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
டெஸ்லா என்ன என்றால்? டி ஷேப்பில் திவ்யா துரைசாமி உடைய தொப்புள் இருக்கும். அவர் வெளியிடும் அனைத்து ஃபோட்டோக்களிலும் அதை வெளிப்படையாகவே காட்டியிருப்பார். இதனால் இவரை பலருமே டெஸ்லா அக்கா, டெஸ்லா அழகி என்று தான் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இது ஆரம்பத்தில் திவ்யாவிற்கு புரியவில்லை என்றாலும் அதற்கு பின்னர்தான் புரிய ஆரம்பித்தது.

-விளம்பரம்-

திவ்யா துரைசாமி பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக திவ்யா துரைசாமி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் ரொம்ப எமோஷனலாக பிரேக்கப் ஆக்கிவிட்டேன் என்றால் இரண்டு, மூன்று நாட்களுக்கு சாப்பிடவே மாட்டேன். தூக்கம் தான் என்னுடைய கோபத்தை குறைக்கும். சமீபத்தில் கூட இந்த நிகழ்வு என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. காரணம் டெஸ்லா என்ற வார்த்தையை எங்கிருந்து கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. அந்த விஷயம் வைரலான சமயத்தில் சூட்டிங்கில் சின்ன சின்ன பசங்க எல்லோரும் என்னை டெஸ்லா அக்கா என்று தான் அழைப்பார்கள்.

டெஸ்லா குறித்து சொன்னது:

நான் திருப்பி அது என்ன டெஸ்லா அக்கா? என்று கேட்பேன். பின் சூட்டிங் பாட்டில் இயக்குனர்கள், டிஓபி எல்லோருமே டெஸ்ட்லான்னு கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். இது ஆரம்பத்தில் புரியவில்லை என்றாலும் அதற்கு பின்னர்தான் புரிய ஆரம்பித்தது. எனக்கு தொப்புளை விட அழகான இதயம், முகம் இருக்கிறது. அதையெல்லாம் பாருங்கடா என்றெல்லாம் கமெண்ட் போட்டவர்களுக்கு சொல்ல தோணும் முதலில் கோபப்பட்டேன் அதற்குப்பின் அதுவே எனக்கு பழகிவிட்டது. இதனால் நான் ரொம்பவே மனமுடைந்து வேதனைப்பட்டேன் என்று கூறியிருந்தார்.

Advertisement