விஜயை விமர்சித்து திவ்யா சத்யராஜ் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சத்யராஜ். இவர் ‘கட்டப்பா’ என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர். இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார். மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

மேலும், சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், திவ்யா அப்படி இல்லை. இவர் சிறு வயதில் படங்களில் நடிக்க ஆசைப்பட்டாலும், பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார். தனது அப்பாவை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிஷனிஸ்ட்களில் ஒருவராக சத்யராஜ் மகள் திவ்யா இருக்கிறார். இவர் நியூட்ரிஷியன் துறையில் எம் ஃபில் பட்டம் பெற்றுள்ளார். இவர் சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்ஃபரன்ஸ்களும் நடத்தி இருக்கிறார்.
திவ்யா சத்யராஜ் குறித்த தகவல்:
மேலும், சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்யா அடிக்கடி ஊட்டசத்துக் குறித்தும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் தான் திவ்யா திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடனே இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது. தற்போது இவர் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் துணை செயலராக பதவி வகித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் விஜய்யை விமர்சித்து திவ்யா சத்யராஜ் போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திவ்யா வீடியோ:
திமுக அரசு மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். பெட்ரோல் விலை குறைப்பு, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் 48, காலை உணவு திட்டம், புதுமனை திட்டம், கட்டணம் இல்லாமல் மகளிர் பேருந்து போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறார்கள். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெளிவு திமுக அரசுக்கு இருக்கிறது. ஆனால், மற்ற பலவீனமான கட்சிகளுக்கு தமிழ்நாட்டைப் பற்றி எந்த ஒரு புரிதலும் இல்லை.

பெண்களுக்கு விடுத்த மிரட்டல்:
ஒரு நல்ல தலைவருக்கு இந்தியாவை மட்டும் இல்லை முழுநாட்டையும் பொறுமையாகவும் திறமையாகவும் புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்ணா மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் கிடையாது. நான் ஒரு அரசியல்வாதியாக தான் அவரை கேள்வி கேட்கிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும் பெண்களுக்கும், அவருடைய கட்சியிலிருந்து வெளிவந்த பெண்களுக்கும் அவருடைய தொண்டர்கள் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.
https://www.youtube.com/shorts/98GqS-SxNLE
விஜயை விமர்சிக்க காரணம்:
இதை அந்த பெண்ணினுடைய அம்மா பேட்டியும் அளித்திருக்கிறார். உங்களுக்கு பாதுகாவலர்கள் இருப்பது போல அந்த பெண்களுக்கு பாதுகாவலர்கள் கிடையாது. ஒரு கட்சியினுடைய தலைவராக நீங்கள் இதையெல்லாம் தடுக்க வேண்டும். ஒரு திறமையான அரசியல்வாதி மக்கள் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும், அதிகாரத்தின் மீது கிடையாது என்று கூறியிருக்கிறார்.






