டி.டி யின் விவாகரத்துக்கு இதுதான் காரணம் ! ஆனால் முக்கிய காரணம் இந்த புகைப்படம் தான் ?

0
9308

சின்னத்திரையில் காபி வித் டி.டி என்ற திரைகளைஞர்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் டி.டி என்ற திவ்ய தர்ஷினி. மேலும், சினிமாவில் நடத்தப்படும் பெரிய பெரிய கலைநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரபலமாகவும் இருந்து வருகிறார் டி டி.
Divyadarshiniகடந்த 2014ஆம் ஆண்டு தனது நீண்டு நாள் நண்பரும் காதலருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்’உடன் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை தமிழ் திரையுலகமே திரண்டு வந்து இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது.

திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.திருமணம் முடிந்த பின்னர் டிடி’யை, படங்களில் நடிக்க வேண்டாம் என ஸ்ரீகாந்த் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, இன்னும் சில படங்கள் மற்றும் அடுத்ததாக மணிரத்னம் மற்றும் ராஜிவ் மேனன் ஆகியோரது படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் டி டி. இதன் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
dhivya-dharshiniமேலும், இந்த வருட துவக்கத்தில் பாடகி சுசித்ரா’வின் ட்விட்டர் பக்கத்தில் பல சினிமா பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் எனக் கூறி புகைப்படங்கள் பல வெளியானது. இதில், டி.டி’யின் புகைப்படமும் ஒருவருடன் இருப்பது போல இருந்து.
ddஇதன் காரணமாகவும் ஸ்ரீகாந்த் மற்றும் டிடி ஆகிய இருவருக்கும் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது விவாகரத்து வரை வந்து நிற்கிறது.இருவரும் ஒரு மனதாக விவாகரத்து கேட்டுள்ளதால் கூடிய சீக்கிரத்தில் இருவருக்கும் விவாகரத்து கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.