லேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.! வைரலாகும் வீடியோ.!

0
991
Dmk-Manikkam
- Advertisement -


சென்னை கிரீம்ஸ் ரோடு சுகந்திரா நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தி.மு.க.வின் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் கழக அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் மனைவி செல்வி உள்ளாட்சி தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் மாணிக்கம் கிரீம்ஸ் ரோடு சாலையில் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த முதியவர் ஒருவர், காரை கடக்க முயன்றபோது, அவரது வாகனம் தெரியாமல் மணிக்கம் வாகனம் மீது லேசாக உரசியது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணிக்கத்தின் பெற்றோர், அவரது மனைவி மற்றும் சகோதரர் அந்த முதியவரை மரப்பலகை மற்றும் இரும்புக்கம்பி உள்ளிட்டவற்றை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். 

- Advertisement -

தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் தி மு க பிரமுகர் யுவராஜ் என்பவர் கடை ஊழியரை தாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement