விஜய்யின் 4.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரின் வியக்கவைக்கும் வசதிகள் தெரியுமா ?

0
4938
Vijay-rols-royce-car

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி விஜய் பல கோடிகளில் சம்பளம் வாங்கக் கூடியவர். தற்போது வரை 61 படங்கள் நடித்துள்ள அவருக்கு பல நூறு கோடிகளில் சொத்து இருக்கலாம் என யூகிக்கமுடிகிறது. மேலும் சென்னை சாலிக்கிராமத்தில் ஒரு பெரிய வீடும், நீலங்கரையில் ஒரு சொகுசு வீடும் வைத்திருக்கிறார் விஜய்.

rolls-royce-car

இது போக அவர் கார் பிரியர் என்பதால் , பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 சொகுசு கார்கள் வைத்துள்ளார் விஜய். இந்தியாவில் ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் விஜயிடம் உள்ளது. இதன் மதிப்பு 4.5 கோடியாகும். இந்த காரில் எண்ணற்ற வசதிகள் உள்ளது. Flying Lady Blue Symbol இதன் மேல் உள்ளது. மேலும், இந்த கார், 16 வகையான உயர்ரக பெயிண்ட் வைத்து கலர் செய்யப்பட்டுள்ளது.

rolls-royce logo

இந்த காருக்குள் சென்றால் ஒரு சின்ன சொகுசு வீடு போல உள்ளது. காருக்குள் டீவி, கேமரா என பல வசதிகள் உள்ளது. இந்த காரில் பூசப்ட்டுல்ல பெயிண்ட் அனைத்தும் தங்கம் அல்லது வெள்ளி முலாம் பூசப்பட்டது.

அடுத்து 1 கோடி மதிப்புள்ள Audi – A8 வைத்துள்ளார். இந்த கார் அதிகபட்சமாக 300 கி.மீ வேகம்வரை அசால்ட்டாக செல்லக்கூடியது.

Audi a8

மேலும், ஒரு ரெட் கலர் BMW 5 சீரியஸ் கார் வைத்துள்ளார் விஜய். இந்த கார் கிட்டத்தட்ட 1.5 கோடியாகும். இந்த காரை எடுத்துக்கொண்டு தான் இரவு நேரங்களில் போர் அடித்தால் சிட்டியை சுற்றி வருவாராம் விஜய்.

BMW-5-Series

அதுபோக, சின்னதாக ஒரு மினி கூப்பர் வைத்துள்ளார் விஜய். இந்த கார் 70 லட்சம் மதிப்பிலானது. இந்த காரை தனது பர்சனல் யூசுக்காக வைத்துள்ளார் விஜய். இந்த காரை எப்பொழுதும் அவரே ட்ரைவ் செய்வாராம்.