டாக்டர் பட பிரபலத்தை நேரில் அழைத்து பாராட்டியுள்ள வடிவேலு – என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
298
Doctor
- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படம் வசூலில் கோடிகளை குவித்தது. மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்நிலையில் வடிவேலு அவர்கள் தன்னை நேரில் அழைத்துப் பாராட்டி இருப்பதாக நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, மக்களுக்கு என்ன தேவை என்பதை நெல்சன் தெளிவாக அறிந்திருக்கிறார். டாக்டர் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படம் மக்களுக்கு பிடிக்கும் என தெரியும். ஆனால், இந்த அளவிற்கு அவர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்று நினைக்கவில்லை.

இதையும் பாருங்க : என் மகன் நல்லா வளந்துட்டான் – தன் மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்த ரீமா சென்.

- Advertisement -

அதோடு படத்தின் இறுதிகட்டப் பணியின் போது நிறைய காமெடி காட்சிகளை நெல்சன் படத்திலிருந்து நீக்கிவிட்டார். அதிலும் அந்த மெட்ரோ காட்சியில் கூட சில காமெடிகள் காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தது. மேலும், நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த வேட்டை மன்னன் என்ற படத்தில் காமெடியனாக நடிக்க நான் ஒப்பந்தமாகி இருந்தேன். ஆனால், சில காரணங்களால் என்னால் நடிக்க முடியாமல் போனது. பின் அவர் வருடம் வருடம் அவருடைய படத்துக்காக என்னுடைய புகைப்படத்தை அனுப்ப சொல்லி கேட்பார். எப்படியோ எனக்கு டாக்டர் படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது.

இந்த படத்தின் மூலம் தான் நடிகனாக அங்கீகாரம் பெற்றதாக நான் உணர்கிறேன். மேலும், வைகைபுயல் வடிவேலு அவர்கள் நாய் சேகர் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லி போனில் என்னிடம் அவர் கேட்டிருந்தார். பின் நான் அவரை சென்று சந்தித்தேன். அவர் என்னுடைய எல்லா காமெடிகளையும் பார்த்திருப்பதாகவும், நன்றாக நடித்து இருப்பதாகவும் சொல்லி என்னைப் பாராட்டினார். இது என்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement