நிச்சியமாக தமிழ் நாட்டில் இது திரைக்கு வாரது – கேலி செய்த ரசிகர், எச்.ராஜா சொன்ன பதில். (அப்போ படம் ஹிட்டு தான்)

0
25581
rudra
- Advertisement -

திரௌபதி பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். இவர், இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார். பின் பல ஆண்டு கழித்து திரௌபதி படத்தின் மூலம் ரீ – என்ட்ரி கொடுத்தார்.

இதையும் பாருங்க : நான் சென்னைல பொறந்ததால அந்த கிராமத்தில் – விவாகரத்து குறித்து மனம் திறந்த நளினி.

- Advertisement -

திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன்.இந்த படத்தில் குக்கு வித் கோமாளி தர்ஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனன், ராதாரவி மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது. இந்த ட்ரைலருக்கு BJPயின் எச் ராஜா வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு ட்விட்டர் வாசி ஒருவர், நிச்சியமாக தமிழ் நாட்டில் இது திரைக்கு வாரது என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு ராஜா, வரும். வரவைப்போம் என்று பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement