பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகிஇருந்தது.

மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும். சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து விட்டார் மோகன் என்று ஒரு சர்ச்சையும் வெடித்தது.

இதையும் பாருங்க : பல்வேறு சினிமா பிரபலங்களை அழைத்து கே எஸ் ரவிகுமார் மகள் திறந்த மருத்துவமனை பற்றி தெரியுமா ?

Advertisement

இந்த படத்தில் திரௌபதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆன யோகி பாபு நடித்த ‘மாண்டேலே’ படத்திலும் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷீலா பேசுகையில், ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதை விட வித்தியாசமான கதாபாத்திரத்தை சேர்ந்து நடிப்பது எனக்கு பிடிக்கும்.

அதுமாதிரிதான் ஒரு நடிகையாக திரௌபதி படத்தின் கதையை கேட்டபோது எனக்கு பிடித்துப்போனது. கருத்து ரீதியாக அந்த படத்தை பற்றி நான் எதையும் பேச விரும்பவில்லை. படத்தை நடித்து கொடுப்பது நடிகர்கள் கையில் இருந்தாலும் அந்த படம் எப்படி போய் சேருகிறது என்பது இயக்குனரை சார்ந்தது. திரௌபதி படத்தின் கரு எனக்கு பிடித்ததால் தான் நான் நடித்தேன். 10 பேர் என்னை தப்பாக கூட நினைத்து இருக்கலாம். இப்போது மண்டேலா படத்தில் நடித்திருக்கிறேன். இப்போ அந்த படத்தை பார்த்து விட்டு அதே பத்து பேருக்கு என் மீது நல்ல அபிப்ராயம் வரலாம் என்று கூறியுள்ளார் ஷீலா.

Advertisement
Advertisement