சில்லரைய சிதற விட்டது தப்பாகிடுச்சே – கமலின் ‘விக்ரம்’ பட டீசரை விமர்சித்த திரௌபதி இயக்குனர்.

0
9442
mohan
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகிஇருந்தது.

-விளம்பரம்-

மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும். சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து விட்டார் மோகன் என்று ஒரு சர்ச்சையும் வெடித்தது.

- Advertisement -

இந்த நிலையில் மோகன் மற்றும் ரிச்சர்ட் இணைந்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை எடுக்க உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மோகன் பதிவிடும் பதிவு அவ்வப்போது சர்ச்சையாகி விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தின் மோஷன் வீடியோ குறித்து கமன்ட் செய்து இருப்பது கமல் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கோபத்தை கிளறியுள்ளது.

நேற்று வெளியான ‘விக்ரம்’ படத்தின் மோஷன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மோகன், சில்லரைய சிதற விட்டது தப்பாகிடுச்சே என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு ட்விட்டர் வாசி ஒருவர், எவ்ளோ சில்லரைய சிதற விட்டாலும் காப்பி அடிச்சாவது உன்னால இவ்ளோ குவாலிட்டியா டீசர் எடுக்க முடியாதுடா என் சிப்ஸ் என்று கமன்ட் செய்ய அதற்கு Quality ய வச்சி என்ன பண்ண போற.. இன்னைக்கு ஒரு ப்ரோக்கர பதிவாளர் அலுவலகம் உள்ள போக சொல்லு பார்ப்போம்.. படைப்பு மக்களுக்கானது.. இந்த மாற்றம் போதும் எனக்கு.

-விளம்பரம்-
Advertisement