பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளார் மோகன். அதில், , திரெளபதி என கடவுளின் பெயரை வைத்ததால்தான் இப்படத்தின் மீது வன்மம் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார் தான் இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர்,   விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : பார்ப்பன பிள்ளையின் அந்த தொனி கொஞ்சம் அதிகம் தெரிந்ததால் ஷங்கரின் படத்தை நிராகரித்தேன் – கமலின் ரீ வைண்ட்.

Advertisement

மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜூப்லின், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றுப திவிட்டிருந்தார் . அதே போல கடந்த சில நாட்களுக்கு முன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட மோகன், ரிச்சர்ட்டுடன் என்னுடைய அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தயாராகி வருகிறது. தலைப்பு விரைவில் வெளியாகும் என்றுபதிவிட்டிருந்தார்.

மேலும், சமீபத்தில் தனது அடுத்த பட அறிவிப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோகன், எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன். ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும்.. நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும் என்று கூறியிருந்தார்.

Advertisement

இந்த டீவீடக்கு ட்விட்டர்வாசி ஒருவர், Postponed (ஒத்திவைப்பது) என்பது அஜீத்துக்கும் அவர் ரசிகர்களுக்கும் புதுசா ?என்று கிண்டலாக கமன்ட் செய்து இருந்தார். அந்த ட்விட்டர்வாசி பெயர் மாஸ்டர் என்று குறிப்பிட்டிருந்தால். அந்த ரசிகர், விஜய் ரசிகர் என்று புரிந்துகொண்டு இதற்கு பதிலடி கொடுத்த மோகன், அறிவித்த தேதியில் மாஸ்டர் படம் பார்த்தீங்க போல என்று பதில் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement