‘ஜீ5’ என்ற, ஓ.டி.டி., தளத்தில், ‘காட்மேன்’ என்ற தொடர் வெளியாக உள்ளது. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடரின் டிரெய்லர், சில நாட்களுக்கு முன் வெளியானது.அந்த தொடரில், காவி உடை அணிந்து வரும் ஒருவர், ‘நான் கண்ட பிராமணர்கள் எல்லாம் அயோக்கியர்கள்’ என்று கூறிய வசனம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘காட் மேன்’ என்ற ஆன்லைன் தொடரின் டிரெய்லரில், வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கிலும், மதரீதியாக பகைமையை துாண்டும் விதத்திலும், அதன் மூலம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் காட்சிகள் அமைந்துள்ளன. இப்படத்தின் இயக்குனர், பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ, நடிகர்கள், நிர்வாக இயக்குனர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘விஸ்வ ஹிந்து பரிஷத் – தமிழ்நாடு’ சார்பில், சென்னை மாநகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கூட அளித்திருந்தார்.

Advertisement

இப்படி சர்ச்சையை ஏற்படுத்திய காட் மேன் குறித்து பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், திரௌபதி பட இயக்குனர் மோகன் காட் மேன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, காட் மென் சீரியசை தடை செய்ததில் எந்த தவறும் இல்லை.. குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை இழிவாக பேசுவதை இன்று ஆதரிக்க துடிப்பவர்கள் நாளை தான் சார்ந்த சமூதாயத்தை விமர்சித்து யாராவது தயாரித்தால் என்ன மனநிலையில் இருப்பார்கள்.. படைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர வன்மத்தை அல்ல என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மோகன், காட் மேன் குறித்து ட்வீட் போடுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக தான், இயக்குனர் பா ரஞ்சித் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், காட்மேன் தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் & நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள்.

Advertisement

இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருந்து விட்டு பிரச்சனை என்ற ஒன்று வந்தவுடன் ஸீ இந்தியா நிறுவனம் காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறியது அர்த்தமற்ற செயல். இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். பா ரஞ்சித் படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ட்வீட் போட்ட நிலையில் இயக்குனர் மோகனின் ட்வீட் ரஞ்சித்தின் இந்த கருத்திற்கு எதிராகவே இருக்கிறது.

Advertisement
Advertisement