“அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிலும் இவர் தான்- அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன்.

By Rajkumar · 18/3/2020

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்துள்ளார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

வீடியோவில் 3 :15 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=zllOwBP9Djs

இந்த படம் பெரிய அளவு பட்ஜெட் இல்லை என்றாலும் வசூலில் படத்தின் பட்ஜெட்டை முந்தியது. இந்த படம் குடும்ப பெண்களின் ஆதரவையும் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளார் மோகன். அதில், , திரெளபதி என கடவுளின் பெயரை வைத்ததால்தான் இப்படத்தின் மீது வன்மம் காட்டப்படுவதாக தெரிவித்துள்ளார் தான் இயக்கும் அடுத்த படத்துக்கும் கடவுள் பெயரிலேயே தலைப்பு வைக்கப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர்,   விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : காத்து வாங்கும் சட்டை. படு கிளாமர் போஸ் கொடுத்துள்ள பிகில் பட நடிகை. என்ன சிங்கப்பெண்ணே இதெல்லாம்?

மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜூப்லின், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், எங்கள் கூட்டணியில் அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றுப திவிட்டிருந்தார் . இந்த நிலையில் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள மோகன், ரிச்சர்ட்டுடன் என்னுடைய அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தயாராகி வருகிறது. தலைப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/mohandreamer/status/1239850274690195458

ஏற்கனவே, திரௌபதி படம் வெளியாவதற்கு முன்பாக பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரிச்சர்ட்டிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில், இயக்குனருடன் பேசியபோது எனக்கு பெரிய ஹீரோக்களின் படம் வந்தால்கூட என்னுடைய அடுத்த படம் ரிச்சர்ட் உடன் தான் இருக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார் . உங்கள் இருவருக்கும் உள்ள உறவைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டது அதற்கு பதில் அளித்த ரிச்சர்ட், அது எனக்கும் தெரியவில்லை எங்களுக்குள் எப்படி இப்படி ஒரு உறவு வந்தது என்று தற்போதைக்கு 5 கதை தயாராக இருக்கிறது.

ஒன்றின் பின் ஒன்றாக நாங்கள் அதனை செய்யவில்லை என்றாலும் என்னுடைய அடுத்த படம் கண்டிப்பாக அவருடன் தான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மோகன் மற்றும் ரிச்சர்ட் கூறியது போலவே, தற்போது இவர்கள் அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மோகன். விரைவில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full