இப்படி எல்லாம் படம் எடுத்தா மதிக்கமாட்டாங்க - செல்வாவின் டீவீட்டுக்கு திரௌபதி இயக்குனர் போட்ட கமன்ட் - ரசிகர்களின் ரியாக்ஷன்.

By Rajkumar · 19/8/2021

ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் குறித்து பொய் சொன்னதாக இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் செல்வராகவனின் இந்த பதிவிற்கு திரௌபதி இயக்குனர் மோகன் தனது கருத்தை தெரிவித்து உள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. செல்வராகவன் இயக்கிய படங்களிலேயே மிகவும் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் வெளியான போது ஒரு சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தற்போது இந்த படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.க்ராபிக்ஸ் தொழில் நுட்பம் தமிழ் சினிமாவில் சரியாக பயன்படத்தப்படாமல் இருந்த காலகட்டத்தில் செல்வராகவன் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை அருமையாக கையாண்டிருப்பார். அதுபோக சோழர் பரம்பரையின் வரலாற்றை விவரிக்கும் காட்சி மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : பல ஆண்டுகள் கழித்து பிறந்த மகன்கள் - முதல் முறையாக பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சி மூலம் காட்டிய சென்ராயன்.

இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து செல்வார்கவன் போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள செல்வராகவன், ”ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி. ஆனால் இதை ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்த 32 கோடி என அறிவிக்க முடிவு செய்தோம்.

என்ன ஒரு முட்டாள்தனம்! படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும், அது சராசரியாகவே கருதப்பட்டது! முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது எனக் கற்றுக் கொண்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் செல்வராகவனின் இந்த டீவீட்டுக்கு திரௌபதி மோகன் கமன்ட் செய்துள்ளார்.

அதில், பெரிய பட்ஜெட்ல பணம் பண்றேன்.. பெரிய வசூல் மழை.. 100 கோடி.. 200 கோடி.. 500 கோடி இதெல்லாம் சொன்னா தான் தரமான சினிமான்னு நம்ப வச்சிட்டாங்க சார்.. லட்சங்கள்ல படம் தயாரிச்சா மதிக்க மாட்டங்கன்னு எண்ணம் இங்க.. திரைப்பட தயாரிப்பு முறை மாற வேண்டும்.. சில கோடிகள் செலவு போதும் வெற்றி பெற என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full