பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சென்றாயனுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. தற்போது முதல் முறையாக தனது மகன்களை காட்டி இருக்கிறார் சென்றாயன். நடிகர் சென்ராயன், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்ராயன், அதன் பின்னர் ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். சினிமாவில் காமெடி முகத்தை பார்த்த நமக்கு இவரது சீரியசான மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரிந்தது.
இதையும் பாருங்க : தனுஷ் இங்கிலிஷ்ஷை கேட்டு சிரித்த கஜோல் – சமாளித்துள்ள தனுஷ் – வைரலாகும் வீடியோ. (பாலிவுட்க்கு இதான் வேல போல)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார்.
. சென்ராயன் மனைவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பேட்டி ஒன்றில் பங்கேற்ற சென்றாயன், தனது மகனுக்கு ஒன்றரை வயது ஆகிறது. அவருக்கு செம்பியன் என்று பெயரை வைத்து இருக்கிறேன் என்று கூறி இருந்தார். அதை தொடர்ந்து இவருக்கு மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் தனது இரண்டு மகன்களை பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார் சென்றாயன்.