அட, திரௌபதி படத்திற்கு முன்பே 13+ பாலியல் விழிப்புணர்வு பாடலை எடுத்துள்ள மோகன்.

By Rajkumar · 2/9/2021

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=RLsLugPZ-RY&feature=youtu.be

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.அதன் பின்னர் கிரிவலம் நாளை யுகா தமிழகம் பெண் சிங்கம் போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்னதான் அஜித்தின் மைத்துனர் ஆக இருந்தாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இதையும் பாருங்க : எஃப்ஐஆரில் ஏ1னாக இருக்கும் ஆர்யாவை போலீஸ் காப்பாற்றுகிறதா ? ஈழப் பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி

பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருந்தார்.திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு 'ருத்ர தாண்டவம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/mohandreamer/status/1433296334455406593

கௌதம் மேனன், ராதாரவி மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இப்படி நிலையில் 2016 ஆம் ஆண்டு மோகன், 13 plus பாலியல் விழிப்புணர்வு பாடல் ஒன்றை இயக்கி இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தற்போது பார்த்துவிட்டு பாராட்டி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full