எஃப்ஐஆரில் ஏ1 இருக்கும் ஆர்யாவை போலீஸ் காப்பாற்றுகிறதா ? ஈழப் பெண்ணின் வழக்கறிஞர் கேள்வி

0
3470
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் ஒருவர் பண மோசடி புகார் அளித்த விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ஆர்யா மீது கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியில் வசித்து வரும் இலங்கை பெண் வித்ஜா புகார் அளித்த செய்தி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆர்யா இவரிடம் இருந்து 70 லட்சம் ரூபாய் வரை பணத்தை ஏமாற்றி விட்டார் என்று ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் வரை புகார் அளித்து உள்ளார்.

-விளம்பரம்-
arya

தற்போது அந்த புகார் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை சென்னை காவல்துறை விசாரித்து சில தினங்களுக்கு முன்பு இருவரை கைது செய்தது. சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், முகமது ஹுசைனி என்ற இருவரும் நடிகர் ஆர்யாவின் குரலில் பேசி பணம் பறித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

இதையும் பாருங்க : மகன் பிறந்த சந்தோசத்தை குயூட் புகைப்படத்தை பகிர்ந்து அழகான கவிதையோடு பகிர்ந்த NINI நடிகர்.

- Advertisement -

நடிகர் ஆர்யாவும் உடனடியாக காவல்துறைக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் ட்விட்டரிலும் இந்த வழக்கு முடிந்து விட்டது என்று பதிவு செய்துள்ளார். ஆனால், தற்போது திடீரென்று இந்த வழக்கில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு உள்ளது.மேலும், ஆர்யாவிடம் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று வித்ஜா கூறியுள்ளார். இது குறித்து வித்ஜா வழக்கறிஞர் ஆனந்த் கூறியது, போலீஸின் முதல் தகவல் அறிக்கையில் ஏ1 ஆர்யா, ஏ2 அவரது அம்மா, ஏ3 முகமது அர்மான், ஏ4 முகமது ஹுசைன்னுதான் இருக்கு.

பணம் மோசடி செய்தது நடிகர் ஆர்யா இல்லையாம்- ஆர்யாவின் டூப்பாம்: அதிர்ச்சி  தகவல்! ஆர்யா நன்றி - தமிழ்நாடு

ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியை காப்பாற்ற நினைத்து தப்பு செய்தது நான் மட்டும்தான் என்று சொன்னால் அதை எப்படி சட்டம் ஏற்றுக்கும். வித்ஜா ஒரு டாக்டர். ஆர்யாவை பார்க்காமல்,பேசாமல் எப்படி அவ்வளவு பெரிய பணத்தைக் கொடுப்பார்கள். ஆர்யாவிடம் வீடியோ கால் கூட பேசி இருக்கிறார். அப்ப ஆர்யா வீட்டை சுத்தி காண்பித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வீடியோ ஸ்கிரீன் ஷாட்டைக் கேட்டு வாட்ஸ்அப் சிஇஓ-க்கு கடிதம் எழுதியிருக்காங்க வித்ஜா. அந்த ஆதாரங்கள் கிடைத்த பிறகு மீண்டும் போலீஸ் இடம் அதையெல்லாம் கொடுத்து உண்மையான குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தராமல் விடமாட்டோம். ஆர்யா தன் மீது தப்பில்லை என்றால் போலீஸ் இடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்கிறார். மேலும், சென்னை போலீஸ் ஆர்யாவுக்கு துணை போவதாக சினிமா வட்டாரத்திலேயே பலரும் பேசப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கு ஆர்யாவை விடாது கருப்பு போல் துரத்திக் கொண்டே இருக்கிறது.

Advertisement