விஜய் கூட எப்ப படம் பண்ண போறீங்க – ரசிகரின் கேள்விக்கு சீரியஸாக பதில் அளித்த மோகன். ரசிகர் கொடுத்த செம பல்ப்.

0
28785
Vijay

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் விஜய் இன்று அதாவது ஜூன் 22 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இவரை விட இவரது ரசிகர்கள் தான் இவரது பிறந்த நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அன்னதானம் என்று செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள் அதேபோல பிரபலங்களும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்திருந்தார்.

ஆனால் மோகன் செய்த இந்த ட்வீட்டை விஜய் ரசிகர் ஒருவர் பங்கமாக கலாய்த்திருக்கிறார் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மோகன் அதன் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார் இந்த திரைப்படத்திற்கு பல்வேறு சர்ச்சைகள் எனவே இவருக்கு பெரும் பிரபலம் கிடைத்திருந்தது மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பெட்டர் வாசிகளுடன் ஏதாவது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதும் வழக்கமான ஒரு விஷயம் தான்

- Advertisement -

சமீபத்தில் கூட விஜய் சேதுபதி பசிக்கு ஊசி கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறிய கருத்திற்கு இவர் மறு கருத்து தெரிவித்து ட்வீட் போட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று விஜய் பிறந்தநாளுக்கு விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குனர் மோகன் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் #HappybirthdayThalapathy என்ற ஹேஸ் டேக்கை குறிப்பிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார் என்றும் பதிவிட்டிருந்தார். மோகனின் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த ஒரு ரசிகர் அண்ணா இவர் கூட எப்ப பண்ணுவீங்க என்று கேட்டிருந்தார்.

ரசிகரின் இந்த கேள்விக்கு சீரியசாக பதித்த மோகன் அவருக்கான கதை இருக்கு காலம் கனியும் உங்கள் அன்பிற்கு நன்றி சகோ என்று தெரிவித்து இருந்தார். ஆனால், அந்த ரசிகரை டேய் நான் சும்மா கேட்டேன் டா உடனே கதை இருக்கு காலம் இருக்கு காய் கனி இருக்கு னு சொல்லிட்டு இருக்க என்று பங்கமாககலாய்த்துள்ளார். ஏற்கனவே மோகனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ட்விட்டரில் மோதல் ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

\

Advertisement