அடையாளம் தெரியாத அளவு புதிய கெட்டப்பில் மாறியுள்ள ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட்.

By Rajkumar · 4/1/2020

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர ஜோடிகள் இருக்கின்றனர். சூர்யா ஜோதிகா துவங்கி ஆர்யா - சயிஷா என்று பல நட்சத்திர ஜோடிகள் இருந்தாலும் இந்த லிஸ்டில் டாப்பில் இருப்பது என்னவோ அஜித் - ஷாலினி ஜோடி தான். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி. திருமணத்திற்கு பின்னர் அஜித் - ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர் என்பது நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி மற்றும் இவர்களுடைய அண்ணன் ரிச்சர்ட் ஆகும். இவர்கள் ரெண்டு பேரும் கூட சினிமா உலகில் பிரபலம் ஆனவர்கள்.

பேபி ஷாலினியின் சகோதரியான ஷமிலி மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தார் இந்த படத்தில் அஞ்சலி என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருதும் கிடைத்தது. அதே போல இந்த படத்தில் ரிச்சர்ட்டும் நடித்திருந்தார். பின்னர் இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தார் ரிச்சர்ட்.

https://www.youtube.com/watch?v=chdBVtw9ILM&feature=youtu.be

பல படங்களில் நடித்தாலும் இவரால் வெற்றிகரமான நடிகராக வலம் வரமுடியவில்லை. இறுதியாக 2016 ஆம் தமிழில் அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது 4 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ரிச்சர்ட். தற்போது திரௌபதி என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது அதில் அடையாளம் தெரியாமல் புதிய கெட்டப்பில் மாறியுளளார் நடிகர் ரிச்சர்ட். மேலும், இந்த படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full